பாக். வெளியுறவு அமைச்சர் அமெரிக்க அமைச்சர் பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பாகிஸ்தானில் கடும் உணவுத் தட்டுப்பாடு குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல மடங்கு பெருகி உள்ளன. நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து உள்ளது .இந்நிலையில் அமெரிக்காவுடன் அரசு ரீதியான உறவை மேம்படுத்தவும் பொருளாதார நட்பை வலுப்படுத்தவும் அந்நாட்டிற்கு பிலாவல் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை விமர்சித்துள்ள இம்ரான் கான், அமெரிக்காவிடம் பிச்சையெடுக்க பிலாவல் … Read more

வங்கதேசம்- இந்தியா நாடுகளுக்கு இடையே மீண்டும் ரெயில் சேவை

புது டெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் மார்ச் 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.  இந்த சேவை நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளிலும் குறைந்துள்ளதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரெயில் சேவை … Read more

Monkeypox | அமெரிக்காவில் உறுதியானது முதல் தொற்று: அறிகுறிகள் என்ன? – 10 தகவல்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டு பதிவான முதல் தொற்று இது. மாசசஸ்ட்ஸ் நகரைச் சேர்ந்த அந்த நபர் ஏப்ரல் இறுதியில் கனடா சென்று திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அமெரிக்க நோய்ப் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. மங்கி பாக்ஸ் பற்றிய 10 தகவல்களை அறிவோம்: 1. 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970 ஆம் ஆண்டு … Read more

மணல் புயல் பாதிப்பால் கண்ணுக்கு மறைந்த புரூஜ் காலிஃபா கட்டடம்

உலகின் மிகவும் உயரமான கட்டடமான புரூஜ் காலிஃபா மணல் புயலால் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மணல் புயல் வீசியது. அண்மையில் ஈராக், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலும் இது போன்ற மணல் புயல் வீசியது. நேற்று வீசிய மணல் சூறாவளிப் புயலால் புரூஜ் காலிஃபாவின் தோற்றம் மறைந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக உலகம் முழுவதும் பரவின. இதனிடையே அபுதானி நகரில் காற்று மாசு … Read more

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்: தலிபான்கள் உத்தரவு

காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் தங்களின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெ ண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் … Read more

தென் கொரியாவின் புளூ ஹவுசில் 74 ஆண்டுகளுக்கு பின் மக்கள் அனுமதி| Dinamalar

சியோல்: தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள, ‘புளூ ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அதிபர் மாளிகையை, 74 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக மக்கள் பார்வையிட நேற்று அனுமதிக்கப்பட்டது. கிழக்காசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில், புளூ ஹவுஸ் என்றழைக்கப்படும் அதிபர் மாளிகை உள்ளது. இதன் கூரை ஓடுகள் நீல நிறத்தினால் அமைக்கப்பட்டதை அடுத்து இந்த மாளிகைக்கு புளு ஹவுஸ் என பெயரிடப்பட்டது. இதன் உள்ளே சென்று பார்வையிட, கடந்த 74 ஆண்டுகளாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், … Read more

பெண்ணுக்கு டிப்ளமோ பட்டம் வழங்க மருத்துவமனைக்கு நேரில் சென்ற பல்கலை கழக அதிகாரிகள்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு டிப்ளமோ பட்டத்தினை பல்கலைக்கழகம் நேரில் சென்று வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   Dillard பல்கலைக் கழகத்தில் Jada Sayles என்ற இளம்பெண் டிப்ளமோ படிப்பினை நிறைவு செய்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா கடந்த 14ந்தேதி நடைபெற்றது. ஆனால் 13ந்தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த  Jada Sayles பிரசவ வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. … Read more

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் – 40க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மாட்ரிட்: பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது. ஆப்ரிக்காவில் ஏற்படும் … Read more

ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு?| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யாவின், ‘எஸ் – 400’ ரக ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை, அடுத்த மாதம் முதல், தன் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களால், பல ஆண்டுகளாக நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதேபோல், மற்றொரு அண்டை நாடான சீனாவால், 2020 முதல், லடாக் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.இவற்றை எதிர்கொள்ளும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி … Read more

கப்பலில் கடத்தி வரப்பட்ட 810கிலோ கிராம் கோகைன் பறிமுதல்

எல்சல்வடார் நாட்டின் La Concordia கடல் பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 810கிலோ கிராம் கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு  2.25 மில்லியன் அமெரிக்க டாலராகும். கடலில் இருந்து 903 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலை எல்சல்வடார் நாட்டு கடற்படையினர் சோதனை போட்டனர். அப்போது சரக்குகள் ஏற்றிச் செல்லும் பகுதியில் கோகைன் போதைப் பொருள் மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் மெக்சிகோ நாட்டின்  Oaxaca  மாகாணத்திற்கு … Read more