சீன பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்

பீஜிங்: சீனாவில் 3 முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த படங்கள் இனரீதியான மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் சில படங்கள் பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களில் சிறுவர், சிறுமிகள் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல வரையப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகள் நாக்கு … Read more

ஆற்றில் படகு தீப்பிடித்து வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15பேர் காயம்

அமெரிக்காவின் Illinois ஆற்றில் படகு தீப்பிடித்து  வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் சிகாகோவின் தென்மேற்குப் பகுதியில் 73மைல் தொலைவில் உள்ள Seneca பகுதியில் நடந்துள்ளது. அந்தப் படகில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கரைக்கு திரும்பி சரி செய்து எரிபொருளை நிரப்பி பின்னர் எஞ்சினை இயக்கிய போது தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Source link

உலகின் மிக ஆபத்தான விஷத்தை பயன்படுத்தும் ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ:  உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பல அயல்நாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறின. இருப்பினும் ரஷ்ய அதிபர் புதின் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளுக்கு பதிலடி தருவேன் என கூறி வருகிறார். மேற்கத்திய நாடுகள் ரஷியாவை எதிர்த்தாலும், அந்நாட்டிடம் இருந்துதான் எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. … Read more

'கே பாப்' இசை உலகில் இடம்பிடித்த முதல் இந்தியப் பெண்

ரூர்கேலா: கே பாப் இசை உலகில் முதல் முறையாக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரேயா லங்கா (18) இடம் பிடித்துள்ளார். பாப், ராப், ஜாஸ், டிஸ்கோ, ராக் என உலகம் முழுவதும் பல்வேறு வகையான இசைகள் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் தென்கொரியாவில் கே பாப் என்ற இசை கோலோச்சி வருகிறது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடு கள், மேற்கத்திய நாடுகளிலும் கே பாப் இசை பிரபலமாக உள்ளது. இந்தியாவில் கே … Read more

'பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவேன்' – மிரட்டிய 5ம் வகுப்பு மாணவன் கைது!

அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில், நாளுக்கு நாள் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உள்ளதால், அந்நாட்டில், அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், … Read more

ரஷ்யாவின் உரம் சப்ளையை உறுதி செய்துள்ள இந்தியா

ரஷ்யாவிடமிருந்து இந்தியா உரம் சப்ளையை உறுதி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவுடன் நீண்ட கால உர இறக்குமதிக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது. உலகளவில் உரம்விலை அதிகரித்த நிலையில் ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பல ஆண்டுகளுக்கு உரம் இறக்குமதி செய்ய உடன்படிக்கை எட்டப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து 18 லட்சம் டன் உரங்களை ஆண்டுதோறும் இந்தியா இறக்குமதி செய்கிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்து இறக்குமதிகளை ரத்து செய்துள்ள நிலையில் … Read more

இந்திய தலித் பிஷப் கர்தினால் ஆகிறார்- ஆகஸ்டு மாதம் பதவி ஏற்பு விழா

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையில் போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் பதவி வகிப்பவர்கள் கர்தினால்கள். இவர்கள் தான் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வார்கள். கர்தினால்களில் அதிகமான வாக்குகள் பெறுகிறவர் தான் புதிய போப் ஆண்டவராக முடியும். கத்தோலிக்க திருச்சபை விதிகளின்படி 120 பேர் கர்தினால்களாக பதவி வகிப்பார்கள். அந்த வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 பிஷப்புகளை, கர்தினால்களாக பதவி உயர்த்தி போப் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கோவா-டமான் மறை … Read more

'ஏதாவது செய்யுங்கள்' – துப்பாக்கிச் சூடு சம்பவங்களை எதிர்த்து ஜோ பைடனை நோக்கி ஒலித்த குரல்கள்

டெக்சாஸ்: “துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிராக ஏதாவது செய்யுங்கள்” என்று அதிபர் ஜோ பைடனிடம் அமெரிக்க மக்கள் வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த, … Read more

நடனமாடும் குதிரையைக் காண ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்.!

பெல்ஜியம் நாட்டின் டென்டர் மோன்டே டவுணில் நடனமாடும் குதிரையைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வரலாற்றுப் பேரணியில் இந்த நடனமாடும் குதிரை மீது நான்கு குழந்தைகள் சவாரி செய்கின்றனர். பாயார்ட் ஸ்டீட் என்று அழைக்கப்படும் மரக்கால் குதிரை 12 பேரால் இயக்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இது பொதுமக்கள் பார்வைக்குத் தட்டுப்படவில்லை. அணிவகுப்பு பேண்டு வாத்தியங்கள் முழங்க நடனமாடும் குதிரையைக் காண 86 ஆயிரம் பேர் திரண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ராட்சத உருவங்களுடன் பல்வேறு மாறுவேடத் தோற்றங்களில் … Read more

என் ஆடைகளை விற்றாவது விலையை குறைப்பேன்- பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத்: இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:- கைபர் பாக்துன்குவா மாகாண முதலமைச்சர் மம்மூத் கான், 24 மணி நேரத்திற்குள் கோதுமை மாவின் விலையை 400 ரூபாய்க்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நான் எனது ஆடைகளை விற்றாவது குறைந்த … Read more