ரயில் தடம் புரண்டுஈரானில் 22 பேர் பலி| Dinamalar

டெஹ்ரான்,-மேற்காசிய நாடான ஈரானில், பயணியர் ரயில் தடம் புரண்டதில், 22 பேர் இறந்தனர்; 8௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரத்தில் இருந்து, யாஸ்ட் நகரத்திற்கு பயணியர் ரயில், நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தபாஸ் நகரை கடந்தவுடன், எதிர்பாராதவிதமாக ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சிக்கி, 22 பேர் உயிரிழந்தனர்; 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி … Read more

மலக்குடல் கேன்சரா: மருந்து ரெடி| Dinamalar

நியூயார்க்,:மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக மலக்குடல் புற்றுநோயை மருந்து வாயிலாக அமெரிக்க மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்கிலிருக்கும் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சோதனை முயற்சியாக ‘டோஸ்டர்லிமாப்’ என்ற மருந்து தரப்பட்டது. ரத்தத்தில் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களை உருவாக்கும் இந்த மருந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தனர். அதன்பின் அவர்களை பரிசோதித்ததில் மலக்குடல் புற்றுநோய் கட்டி இருந்த … Read more

ஒரு தூதன், ஓர் ஓவியன், ஒரு வீதிக் கலைஞன்… – ஓர் ஆய்வாளரின் உக்ரைன் டைரிக் குறிப்புகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து விட்டது. இந்தத் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை, மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுவதும் நிற்கவில்லை. போரின் தொடக்க நாட்களில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளும், அதன் தாக்கங்களும் ஏறக்குறைய குறைந்துவிட்டன. உக்ரைன் பாதிப்புகளைப் பேசிய உலக நாடுகள் தற்போது போரால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்று கவலைப்படத் தொடங்கிவிட்டன. ஒரு கமர்ஷியல் சினிமா வெளியான ஆரம்ப நாட்களின் பரபரப்பு போலவே விவாதங்களும் கவனமும் குவிந்து பின்னர் மறக்கப்பட்டுவிட்டன.இந்த நிலையில், இனவரைவியலாளர் … Read more

இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்குமேல் திருமண விழாக்களுக்கு தடை| Dinamalar

இஸ்லாமாபாத்:பாக். அரசு மின் சிக்கன நடவடிக்கையாக தலைநகர் இஸ்லாமாபாதில் இரவு 10:00 மணிக்கு மேல் திருமண விழாக்கள் நடத்துவதை தடை செய்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இலங்கையைப் போலவே அன்னியச் செலாவணி பற்றாக்குறை நிலவுகிறது. ”பெட்ரோல் டீசல் வாங்க பணமில்லை” என பாக். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறையால் இங்கு மின் உற்பத்தி குறைந்துள்ளது.இதையடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சிக்கன நடவடிக்கையாக அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் … Read more

பாகிஸ்தானில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிக்கு தடை: மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய நடவடிக்கை

இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் பயன்பாட்டை குறைக்கவும், சனிக்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமணநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

இந்தியா – எமிரேட்ஸ் இடையே தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில் நிறுவனங்களில் முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தொழில்துறைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இது வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும். இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, பரஸ்பர ஒத்துழைப்புள்ள … Read more

ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது. அதேநேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது. இந்நிலையில் ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா விடுத்துள்ள செய்தியில், ரஷ்யாவில் தங்கள் செயல்பாட்டை முடித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். போரால் நிலையற்ற சூழல் நீடிப்பதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  Source link

புற்றுநோயை 100% குணப்படுத்தும் அரிய மருந்து – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று சாதனை

மனிதர்களை தாக்கும் நோய்களில் குணப்படுத்தவே முடியாத முக்கிய நோய்களில் ஒன்றாக உள்ளது  புற்றுநோய். ரத்த புற்று, எலும்பு புற்று, நுரையீரல் புற்று, குடல், கல்லீரல் என இதில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை நமது உடலின் எந்த பகுதியையும் தாக்கும் அபாயம் உள்ளது. புற்றுநோய் பாதிப்பை விட அது மேலும் பரவாமல் இருக்க மெற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மிகவும் வலி மிகுந்தவை. இதற்காக தற்போதுவரை கீமோதெரபி எனும் சிகிச்சை முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  புற்றுநோயை குணப்படுத்தும் … Read more

தொழுவத்தில் இருந்து தப்பித்து கட்டுக்கடங்காமல் நெடுஞ்சாலையில் ஓடிய மாடு : குதிரையில் சென்று பிடித்த மீட்புக்குழு

அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்தில் இருந்து தப்பித்த மாடு ஒன்று நெடுஞ்சாலை வழியாக ஓட்டம் பிடித்தது. ஓக்லஹாமா – பென்சில்வேனியா நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த சாலை வழியே வாகனங்களுக்கு மத்தியில் கட்டுக்கடங்காமல் அந்த மாடு வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது. தகவல் கிடைத்ததன் பேரில் குதிரையில் சென்ற மீட்புக்குழுவினர் மாட்டை தொடர்ந்து துரத்திச்சென்றனர். ஒரு கட்டத்தில் பென்சில்வேனியா அருகே அந்த மாடு பிடிபட்டது. வழக்கத்தை விட அது சவாலான பணியாக இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். … Read more