மேக்ரானின் கொள்கை எதிர்ப்பாளர்கள் போலீசார் இடையே மோதல்.. மே தினத்தன்று வணிக கட்டிடங்களை சேதப்படுத்தியதால் போலீசார் நடவடிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மே தினத்தன்று அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கொள்கை எதிர்ப்பாளர்கள் கருப்பு உடையில் வந்து வணிகக்கட்டிடங்களை சேதப்படுத்திய நிலையில், அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசி போலீசார் துரத்த முயன்றனர். பதிலுக்கு அவர்களும் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் மற்றும் பொருட்களை போலீசார் மீது வீசியெறிந்ததால் கலவரம் ஏற்பட்டது. லா ரிபப்ளிக் சதுக்கத்தில் இருந்து கிழக்கு பாரிஸில் உள்ள நேஷன் சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல … Read more

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. ராஜினாமா

லண்டன்   இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ். விவசாயியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் கூட்டத்தொடரின் போது தனது செல்போனில் 2 முறை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து … Read more

ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது திடீரென விபத்து.!

ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் கடினமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொகோச்சா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது. ரஷ்யாவின் Trans-Baikal பிரதேசத்தில் உள்ள Maklakan பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டு ஹெலிகாப்டர் திரும்பிய இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்

பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள் பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

உக்ரைனுக்கு இங்கிலாந்து ஆயுத உதவிகள் வழங்குவதற்கு பதிலடி தரப்படும் என ரஷ்யா சூசகம்

உக்ரைனுக்கு இங்கிலாந்து ஆயுத உதவிகள் வழங்குவதற்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக ரஷ்யா சூசகமாக எச்சரித்துள்ளது. இது குறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான மரிய சாக்கரோவா, நேட்டோ நாடுகளின் ராணுவ இலக்குகளை தங்களால் தாக்க இயலும் என்றும், பிரிட்டனும் அதன் உறுப்பினர்தான் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை எம்பிக்கள் முன்னிலையில் அதிபர் புதின் உரையாற்றியபோது, தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளதாகவும், அதனை பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத … Read more

அமெரிக்க அதிபரை மேடையில் வைத்து கலாய்த்த காமெடி நடிகர்- ஜோ பைடன் என்ன கூறினார் தெரியுமா?

வாஷிங்டன்: ரஷியா – உக்ரைன் போர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போர் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடியன் டிரிவோர் நோவா வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  ரஷியா போன்று ஒரு மோசமான நாடு இருக்க முடியாது. அங்கே சுதந்திரம் என்பது பேச்சுக்கு கூட கிடையாது. அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி ரஷிய அதிபரை விமர்சித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு அவருக்கு … Read more

ரூ.61 ஆயிரம் கோடி நிதியுதவி: கடன் வாங்க சவுதியில் காத்திருக்கும் பாகிஸ்தான் நிதியமைச்சர்

இஸ்லாமாபாத்: கடும் நிதிநெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.61 ஆயிரத்து 218 கோடி நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் நிதியமைச்சர் சவுதி அரேபியாவில் தங்கியுள்ளார். பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி … Read more

சீனாவில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்புப் பணி தீவிரம்

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாங்ஷா நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த 29-ஆம் தேதி மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமான நிலையில், 16 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் மீட்புப் பணியில், ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்புப் … Read more

ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்

லண்டன்: உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது. … Read more

ஜெர்மனி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்புடன் சிவப்புக் … Read more