அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்

சிகாகோ  அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி உள்ளன. இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு கில்பாட்ரிக் பகுதியில் வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதேபோல்  பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்  மொத்தம் … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய ராணுவம் வெடிகுண்டு வீச்சு- 8 பேர் உயிரிப்பு, 11 பேர் காயம்

02.05.2022 04.50:  டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷிய படையினர் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் டொனெட்ஸ்கில் உள்ள லைமன் நகரில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்தததாகவும், அந்த பிராந்திய ஆளுனர் பாவ்லோ கைரிலெங்கோ தெரிவித்துள்ளார்.  03.30:  உக்ரைன் நகரமான மரியுபோலில் உள்ள உருக்காலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உக்ரைன், ரஷிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அசோவ்ஸ்டல்  உருக்காலையில் இருந்து … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்தது ரஷ்யா: ஒடேசா விமான ஓடுபாதையும் தகர்ப்பு

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் முக்கிய விமான நிலைய ஓடு பாதையை தகர்த்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்கு தலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மரியுபோல் நகரில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், சோவியத் காலத்து உருக்கு ஆலை பகுதியில் உள்ள தரைகீழ் … Read more

சி.ஐ.ஏ., அதிகாரியானார் இந்திய வம்சாவளி| Dinamalar

வாஷிங்டன்-அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் முல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிகான் பள்ளத்தாக்கில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர் நந்த் முல்சந்தானி. இவர், அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி உள்ளார். டில்லியில், 1979 – 87 வரை பள்ளியில் படித்த நந்த் முல்சந்தானி, பின்னர் அமெரிக்கா சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தார். ஹார்வார்ட் பல்கலையில் உயர் … Read more

எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த இலங்கை அதிபர் கோத்தபய முயற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ”அரசியல் பேதங்களை ஒதுக்கிவைத்து, நாட்டின் நலனுக்காக ஒன்று சேர வேண்டும்,” என, எதிர்க்கட்சிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மகிந்த … Read more

உக்ரைன் நாட்டு அதிபருடன் அமெரிக்க பார்லி., சபாநாயகர் பேச்சு| Dinamalar

ஜபோரிஜியா-உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மத்தியில், உக்ரைன் சென்ற அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில், ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.துறைமுக நகரமான மரியுபோலில் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் ராணுவம் வசம் உள்ளது. அங்கு, … Read more

பாக்., மாஜி பிரதமர் உட்பட 150 பேர் மீது வழக்கு| Dinamalar

லாகூர்-சவுதி அரேபியாவின் மதினா பள்ளி வாசலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக பலர் கூச்சலிட்ட சம்பவம் தொடர்பாக, பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உட்பட, 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்ததை அடுத்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மதினா பள்ளி வாசலில் … Read more

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர்- உக்ரைன் அதிபர் சந்திப்பு

கீவ்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உக்ரைனுக்கு சென்றுள்ளார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக நன்றி தெரிவிக்க வந்ததாகவும், போராட்டம் முடியும் வரை உக்ரைனுடன் இருப்பதாகவும் உறுதி அளித்தார்.  இருவரும் சந்தித்தபோது எடுத்த விடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷியாவின் அத்துமீறலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் … Read more

உலகின் மிக உயரமான இயேசு சிலை இதுதான்!

பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் உள்ள கொர்கொவாடோ மலை மீது 125 அடி உயர இயேசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நிறுவப்பட்ட இந்த சிலை பிரேசிலின் நாட்டின் அடையாக சின்னமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ரியோவில் உள்ள இயேசு சிலையைவிட உயரமான சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற நகரத்தில் உள்ள மலை மீது 141 அடி உயர இயேசு சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. … Read more

நான் எவ்வாறு இடதில் இருந்து வலதுசாரி ஆனேன்..?- விளக்குகிறார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: தான் எவ்வாறு இடதில் இருந்து வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்தார். தற்போது இதனை இணையத்தில் விற்க அதனை வரைந்த ஓவியக் கலைஞர் முயன்று வருகிறார். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கினார். இதனை அடுத்து அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் … Read more