பாக் அரசு பட்ஜெட் மக்கள் விரோதமானது, தொழில் விரோதமானது.. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடும் விமர்சனம்..!

பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் மக்கள் விரோதமானது தொழில் விரோதமானது என்று நிராகரித்தார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பட்ஜெட்டில் பணவீக்கம் 11 புள்ளி 5 சதவீதம் என்றும் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் யதார்த்தத்திற்குப் புறம்பான கணிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் விமர்சனம் செய்தார். பணவீக்கம் 25 முதல் 30 சதவீதம் இருக்கும் என்ற SPI கணிப்பை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். Source link

சீனா – ரஷ்யா இடையிலான முதல் சாலைப் பாலம் திறப்பு

 ரஷ்யா-சீனாவுக்கு இடையிலான முதல் சாலைப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. அமுர் ஆற்றின் குறுக்கே, 19 பில்லியன் ரூபிள் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் 1கி.மீ. நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க்கை  வடக்கு சீனாவின் ஹெய்ஹேவுடன் இணைக்கிறது. இரு நாடுகளின் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாலத்தில் வாணவேடிக்கை காட்சிக்கு நடுவில், இரு முனைகளிலில் இருந்தும் சரக்கு வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன. Source link

ஒரே விரலால் 129 கி. எடையை தூக்கி கின்னஸ் சாதனை

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டீவ் கீலர் என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார். Source link

War For Taiwan: தைவானுக்காக போரும் நடக்கலாம்: அமெரிக்காவுக்கு சீனாவின் சூசக எச்சரிக்கை

தைவானுக்காகப் போரைத் தொடங்க தயக்கம் இல்லை என்றும் தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்துவது கட்டாயம் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. “தைவான் சுதந்திரம்” என்ற சதித்திட்டத்தை முறியடித்து, தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதியுடன் நிலைநிறுத்துவதே சீனாவின் முடிவு என்று சீன அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். தைவான் சுதந்திரத்தை அறிவிக்கும் பட்சத்தில், பெய்ஜிங் “போரைத் தொடங்கத் தயங்காது” என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவை எச்சரித்தார். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுடன் தனது … Read more

ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் அருகே மேலும் 2 கப்பல்கள் கண்டுபிடிப்பு

போகோட்டோ: 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே 600 பேருடன் கடலில் மூழ்கியது. அண்மையில்தான் இந்தக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கப்பல் யாருக்குச் சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகின்றனர். அந்தக் கப்பலில் உள்ள ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்துக்காக சண்டை நடக்கிறது. சரியாக 1708-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் … Read more

பேருந்தும்-லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 15 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

தென் ஆப்பிரிக்காவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். ஷ்வானின் வடக்கே உள்ள பாட்ரிஷோக் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும்-பேருந்தின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், 15 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய 37 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Source link

மோசமான வானிலையால் ரேடாரை விட்டு மறைந்த ஹெலிகாப்டர்: துருக்கி தொழிலதிபர்கள் உள்பட 7 பேர் மாயம்

இத்தாலியில் மோசமான வானிலையால் தொலைந்து போன துருக்கி பயணிகள் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. 4 தொழிலதிபர்கள் உள்பட துருக்கி நாட்டைச் சேர்ந்த 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் Treviso நகரை நோக்கி சென்ற போது மோசமான வானிலையால் ரேடாரை விட்டு விலகிச் சென்று காணாமல் போனது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் இத்தாலி மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். Source link

வங்கதேசத்துக்கு பஸ் மீண்டும் துவக்கம்| Dinamalar

டாக்கா:இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை துவக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பஸ் போக்குவரத்தும் மீண்டும் துவங்கியது.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்கா நகருக்கு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மற்றும் திரிபுராவின் அகர்தலா நகரங்களில் இருந்து ரயில் மற்றும் பஸ் சென்று கொண்டிருந்தன.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் இந்தப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தற்போது, தொற்று பரவல் குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, வங்கதேசத்துக்கான ரயில் சேவை கடந்த மாதம் 29ல் மீண்டும் துவக்கப்பட்டது.இந்நிலையில், அகர்தாலா … Read more

இலங்கை:உர இறக்குமதி செய்ய ரூ.424 கோடி: இந்தியா உதவி| Dinamalar

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் உருவாகி வருவதை அடுத்து அந்நாடு உர இறக்குமதி செய்வதற்காக 424 கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா அளிக்க உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நம் அண்டை நாடான இலங்கையில் உர இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதன் காரணமாக விவசாயத்துறை 50 சதவீத இழப்பை சந்தித்தது. இதனால் இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.இதையடுத்து உர இறக்குமதி … Read more