‘என் உயிரை பறிக்க சதி நடக்கிறது’ – இம்ரான் கான் பரபரப்பு தகவல்!

பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன் சாப் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் … Read more

உலகின் மிகப்பெரிய பாலம் செக் குடியரசில் திறப்பு| Dinamalar

பிராக் : செக் குடியரசில், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான செக் குடியரசின் டோல்னி மோரோவா கிராமத்தில், ‘ரிசார்ட்’ எனப்படும், ஒரு சொகுசு விடுதி அமைந்துள்ளது. இங்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விதமாக, ஸ்லாம்னிக் மலையையும், கிலம் மலையையும் இணைக்கும் வகையில், பிரமாண்டமான தொங்கு நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.’ஸ்கை பிரிட்ஜ் – 721′ என, பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபாலம், 65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 312 அடி உயரத்தில், 2,365 … Read more

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி

புதுடெல்லி: இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதற்கு, இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வந்தது. ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. போதிய அளவில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்காததாலும், மோசமான வானிலையாலும், … Read more

Wheat Export Ban: இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள்

உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் எதிரொலியாகவும், பக்கவிளைவாகவும் உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அதன் ஒரு விளைவாக, உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலை கொள்ள செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதற்கு  G7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கோதுமையின் சர்வதேச விலையில் சமீபத்திய ஏற்றமானது, கோதுமை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு அதிக லாபத்தை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   உணவு நெருக்கடி ஏற்படவும், உலக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட … Read more

லைவ் அப்டேட்ஸ்: நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்திற்கு, ரஷியா மிரட்டல்

15.05.2022 03.50:  நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை பின்லாந்து பின்பற்றினால்,  ரஷியாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று, அந்நாட்டின் அதிபர் புதின் எச்சரித்துள்ளார். பின்லாந்து தனது பாரம்பரியமான ராணுவ நடுநிலை என்ற கொள்கையை கைவிட்டு விட்டதாகவும், இது அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார். 01.30: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். தலைநகர் கீவ்வில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப் … Read more

நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை- ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர். உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் தெளிவாக கண்டறியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், … Read more

வடகொரியாவில் காய்ச்சலுக்கு 27 பேர் பலி| Dinamalar

பியாங்யாங்:வடகொரியாவில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வேகமாக பரவி வருவதாக, ௧௧ம் தேதி அறிவிக்கப்பட்டது. பலர், ‘ஒமைக்ரான்’ வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.அங்கு, 12ம் தேதி, காய்ச்சல் அறிகுறிகளால் ஆறு பேர் இறந்தனர். அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. … Read more

வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை; இந்தியாவின் முடிவுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்!

ஸ்டட்கார்ட்(ஜெர்மனி), கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கவும், கோதுமையை வாங்கும் தனியார் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, கோதுமை ஏற்றுமதியை தடை செய்திருப்பது, உக்ரைன் போர் காரணமாக விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.  … Read more