பாகிஸ்தானில் 121 டிகிரி வெயில் கொளுத்துகிறது- மக்கள் கடும் அவதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் சிந்து மாகாணத்தில் 121 டிகிரி வெயில் கொளுத்தியது. இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடின. வெயில் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக … Read more

தடுப்பூசிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் கல்தா கொடுக்கும் ஓமிக்ரான் மாறுபாடுகள் BA 4 மற்றும் BA 5

கொரோனாவின் தாக்கம் உலகில் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டால், அதை தவறு என்று சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸின் ஓமிக்ரான் விகாரங்கள் BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றை கொரோனா தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டு வகை விகாரங்களும் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறமையை பெற்றுவிட்டன. கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்தும் அச்சமும் உலகை … Read more

கரோனாவா? – வடகொரியாவில் இதுவரை காய்ச்சலுக்கு 27 பேர் பலி

வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 27 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த உயிரிழப்புகள் கரோனா காரணமாகத்தான் எற்பட்டுள்ளதா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரம் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது … Read more

பால்கன் 9 ராக்கெட்டில் இணையத் தொடர்புக்கான 53 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 53 செயற்கைக் கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி வெள்ளி மாலை 6 மணி 7 நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டின் முதற்கட்டம் பசிபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தரையிறங்கியது. இரண்டாம் கட்டம் வெற்றிகரமாகச் செயற்கைக்கோள்களைப் புவியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது. இதேபோல் மற்றொரு பால்கன் 9 ராக்கெட் மூலம் 53க்கு மேற்பட்ட … Read more

மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு

இலங்கையில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் பெறும் வன்முறை ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “அமைதியாக … Read more

கொரோனா பரவலால், நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது – வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்

கொரோனா பரவலால், நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் கிம் ஜான் உன், கொரோனா பரவலை தடுப்பதற்கான … Read more

ரனிலை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு- இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. மக்களின் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக நேற்று முன்தினம் ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவர் மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதை விரைவில் உறுதி … Read more

ஆஸ்திரேலிய தேர்தல் பிரசாரத்தில் வட கொரிய அதிபர் பங்கேற்பா?| Dinamalar

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட இடத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போலவே தோற்றம் உடைய நபர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில், 21ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாடு முழுதும் நடந்து வருகிறது. தேர்தலில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரிசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று, ஆஸ்திரேலியாவின் சிஸ்ஹாம் பகுதியில் உள்ள … Read more