பதவியேற்புக்கு பின் இந்திய உறவு குறித்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த விரும்புவதாக மீண்டும் பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச திங்கள் கிழமை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டது. இதனால் அங்கு அவசரநிலை நெருக்கடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு … Read more

வெள்ளை நிற வைரம் ரூ.167 கோடிக்கு ஏலம்| Dinamalar

ஜெனீவா:சுவிட்சர்லாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற, ‘கிறிஸ்டீஸ்’ ஏல நிறுவனத்தில் கோழி முட்டை அளவிலான வெள்ளை நிற வைரக்கல் 167 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம்உள்ளது.இங்கு, உலகின் மிக பழமையான பொருட்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். உலகின் பல்வேறு மூலைகளிலும் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்பது வழக்கம்.இந்த வகையில், ‘தி ராக்’ என அழைக்கப்படும் கோழி முட்டை அளவிலான … Read more

கை மாறியது "டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல்"!

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள டிரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மியாமியை சேர்ந்த வணிக நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள் ஒன்றுகூடும் இடமாக இந்த ஹோட்டல் இருந்தது.  அரசாங்க கட்டிடத்தில் இயங்கிவரும் இந்த ஹோட்டல் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கும் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நிலையில், தொடர்ந்த இந்த ஹோட்டல் வால்டோஃப் அஸ்டோரியா என்று பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

நேட்டோவில் இணையும் பின்லாந்து பாதுகாப்பு காரணங்களுக்காக முடிவு| Dinamalar

கீவ்,:ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் நடந்து வரும் நிலையில், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இணைய, பின்லாந்து முடிவு செய்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், நேட்டோவில் இணைய விரும்பியதை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வந்தது. இதன் விளைவாக, பிப்ரவரி 24ம் தேதி முதல், உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் … Read more

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து..!

கொழும்பு, இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில்  கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்துக்கு அடிபணிந்த  மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.  இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அறிவித்திருந்தார். தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி தலைவராவன ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை … Read more

இலவசம்… இலங்கை நாசம்! -பொருளாதார பிரச்னையின் பின்னணி

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கி நிற்கிறது இலங்கை. விண்ணை முட்டும் விலைவாசி, உணவு தட்டுப்பாடு, மின் தடையால் தவிக்கும் மக்கள், வீதியில் இறங்கி போராடுகின்றனர். வன்முறை வெடித்ததால், வேறுவழியின்றி பிரதமர் ராஜபக்சே ராஜினாமா செய்தார். தற்போதைய பிரச்னைக்கு காரணமே அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்ட இலவசம், மானியம் தான்.இந்தியாவின் கீழ் கண்ணீர் துளி போல இருக்கும் சின்ன தீவான இலங்கை உற்பத்தி செய்பவர்களின் தேசம் அல்ல. நுகர்வோரின் தேசமாக உள்ளது. பெரும்பாலான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். … Read more

போரால் உருக்குலைந்த மரியுபோல்… உதவிக்கரம் நீட்டும் ரஷியா!

மரியுபோல், உக்ரைனின் மரியுபோல் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். அசோவ்ஸ்டல் இரும்பாலையைத் தவிர மொத்த மரியுபோலும் ரஷியா வசமான நிலையில், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.  ரஷியாவின் அவசரகால பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றியும், உள்ளூர் மக்களுக்காக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியும் உதவி செய்து வருகின்றனர். மரியுபோலில் போருக்கு முன்னர் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வந்த நிலையில், தற்போது அது ஒன்றரை லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஊரடங்கு… வடகொரிய அதிபர் அதிரடி நடவடிக்கை!

உலக நாடுகள் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தன. பொதுமுடக்கம், தடு்ப்பூசி போன்ற தொடர் நடவடிக்கைகளால் உலக அளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய பூதம் கிளம்பியதை போல, இதுநாள்வரை தங்களது நாட்டில் கொரோனா தொற்று இல்லவே இல்லை என்று மறுத்து வந்த வடகொரியா , முதன்முறையாக, தங்கள் நாட்டு பிரஜை ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ‘நாட்டில் ஓமைக்ரான் வைரஸ் சப்தமின்றி நாட்டுக்குள் நுழைந்துள்ளது. … Read more