ராஜபக்சேவை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றது ஏன்? – அரசு விளக்கம்!

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே, கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதால், அந்நாட்டில், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், தொடர் மின் வெட்டு … Read more

ரஷியாவின் எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய உக்ரைன் ஆபரேட்டர்

கீவ்: ரஷியாவின் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள நோவோப்ஸ்கோவ் மையம் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம், தனது சப்ளையை நிறுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய பின்னர் இயற்கை எரிவாயு விநியோகம் முதன்முறையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே, ரஷியா தனது இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவற்கு, உக்ரைனில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.  இதுபற்றி எரிவாயு சப்ளை செய்யும் … Read more

இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்லுமா: இல்லை என்கிறது துாதரகம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் நடக்கும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர, இந்திய ராணுவம் அங்கு செல்ல உள்ளதாக, அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தியை, நமது தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீவைத்து எரிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, … Read more

பெண்களுக்கான கருக்கலைப்புக்கு கட்டுப்பாடு: கருவை கலைத்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைதண்டனை

சான் சால்வடார்: கருக்கலைப்பு செய்துக் கொண்ட பெண்ணுக்கு எல் சால்வடார் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.  மகப்பேறு அவசரநிலை காரணமாக அந்தப் பெண் கருக்கலைப்பு செய்ததாக அந்தப் பெண்ணைப் பாதுகாக்க உதவிய ஒரு அரசு சாரா அமைப்பான சிட்டிசன் குரூப் ஃபார் தி கிரிமினலைசேஷன் ஆஃப் அபார்ஷன் (Citizen Group for the Decriminalization of Abortion), செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (2022, மே 9) … Read more

அமேசானில் ஏப்ரலில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டன: தொடரும் காடு அழிப்பு

அமேசானில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 1,40,000 கால்பந்து மைதானங்களுக்கு சமமான காட்டு பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் மாதத்தில் மழைக் காலம் என்பதால் அமேசானில் அம்மாதங்களில் மரங்களை வெட்டுவது குறைவாகத்தான் இருக்கும். எனினும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் அமேசானில் இரு மடங்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பிரேசிலின் அதிபராக உள்ள வலதுசாரி ஆதரவாளரான ஜெய்ர் போல்சனோரா ஆட்சிக்கு வந்தது முதலே பிரேசிலில் காடழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் பதவி எற்றதுமுதல் அங்கு … Read more

நாட்டு மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் – இலங்கை ராணுவ தளபதி எச்சரிக்கை

இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு ராணுவ தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும், ராணுவத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே மகிந்த ராஜபக்சே திரிகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இயல்பு நிலை திரும்பியதும் மகிந்த ராஜபக்சே அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் எனவும் … Read more

திரிகோணமலையிலும் மக்கள் திரண்டனர்- ராஜபக்சே தீவுக்கு தப்பி ஓட்டம்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தலைநகர் கொழும்பில் அதிபர் அலுவலகம் அருகே காலி முகத்திடலில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கூடாரங்கள் அமைத்து போராட்டங்கள் நடத்தினார்கள். போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே … Read more

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு தப்பவில்லை: தூதரகம் மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: ‘இலங்கை அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களும் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக வதந்திகள் பரவுவதாக’, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், … Read more

மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.  ராஜபக்ச மர்மமான முறையில் பாதுகாப்பு வீரர்களால் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து, அவர் எங்கே உள்ளார் என்பது குறித்து பல வித வதந்திகள் பரவத் தொடங்கின.  பாதுகாப்புச் செயலரின் கூற்று இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  முன்னதாக, அவரைத் தேடி அவரது டெம்பிள் ட்ரீஸ் அலுவலகம் மற்றும் வதிவிடத்தில் வன்முறைக் கூட்டம் குவிந்தது. … Read more

வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது: ஜெயவர்தனே

வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது என்று இலங்கை அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனே பதிவிட்டுள்ளார். இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கையில் ஆட்சி நடத்தி வரும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் … Read more