ட்விட்டரில் டிரம்பிற்கு விதிக்கப்பட்ட தடை முட்டாள்தனமானது: எலோன் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை கை வசப்படுத்தியுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் முழுமையாக தனட்து கட்டுபாட்டில் கொண்டு வரும் போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக, முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் தளத்தைத் தொடர்ந்து விமர்சித்து வந்த எலான் மஸ்க், டிவிட்டர் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாக … Read more

பற்றி எரியும் தீவு – இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்!

இலங்கையில், பெட்ரோல், டீசல் விலை விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதால், அந்நாட்டில், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், தொடர் மின் வெட்டு காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இலங்கையின் இந்த மோசமான … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மூளையில் பாதிப்பு ?

சீன அதிபர் ஜி ஜின் பிங், மூளையில் உள்ள ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், cerebral aneurysm எனப்படும் ரத்த நாள வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்புக்கு அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் மூலம் ரத்த நாளத்தில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தை சரி செய்ய அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  68 வயதான … Read more

இலங்கைக்கு, இந்தியா ராணுவத்தை அனுப்பாது- மத்திய அரசு திட்டவட்டம்

கொழும்பு: பொருளாதார சீரழிவால் கொலை வெறியுடன் இருக்கும் இலங்கை மக்களிடம் இருந்து தப்பிக்க மகிந்த ராஜபக்சே தப்பிஓடி தலைமறைவாகி இருக்கிறார். கடந்த 20 ஆண்டு காலமாக இலங்கையில் ராஜபோக வாழ்க்கை நடத்திவந்த அவர், இன்று கண்காணாத இடத்துக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ராணுவத்தின் உதவியால் கொழும்பில் இருந்து தப்பிய அவர் தீவு ஒன்றில் தஞ்சம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர் இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டதாக நேற்று இரவு இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டது. … Read more

கலவரத்தை அடக்க இலங்கை விரைகிறதா இந்திய ராணுவம்?

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே அண்மையில் விலகினார். இதனால் … Read more

இந்தியாவில் தஞ்சமடைய அடைக்கலம் கேட்டாரா ராஜபக்சே?- மத்திய அரசு விளக்கம்

கொழும்பு: மகிந்தா ராஜ பக்சே குடும்பத்துடன் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு தப்பி சென்றுவிட்டதாக வெளியான தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை … Read more

ரஷ்யாவின் அதிநவீன ராணுவ டாங்கியை தாக்கிய உக்ரைன் படைகள் : வெடித்து சிதறிய டிரோன் காட்சிகள் வெளியீடு

கார்கிவ் நகரில் உக்ரைன் ராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட ரஷ்ய ராணுவ டாங்கி வெடித்து சிதறிய டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ராணுவ டாங்கியை உக்ரைன் வீரர்கள் ராக்கெட் வீசி தாக்கிய நிலையில், அது வெடித்து வானுயர கரும்புகை எழுந்தது. ரஷ்யாவின் T-90M ரக அதிநவீன ராணுவ டாங்கியை தாக்கி அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிராமங்களை மீட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. … Read more

இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபக்சே தனது பதவியை  ராஜிநாமா செய்தார். இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். ஆளுங்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. இந்தநிலையில், வடரெக்க … Read more

மகிந்த ராஜபக்‌சே இருக்கும் இடம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்

திரிகோணமலை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். இதற்கிடையே, பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி … Read more