40 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : விதிகளை மீறி வெளிநாட்டு நன்கொடை பெற்றுத்தந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., தயாராகி வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. … Read more

இலங்கையை விட்டு மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் – நமல் ராஜபக்சே

கொழும்பு, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சே தற்போது தங்கியிருக்கும் திரிகோணமலை கடற்படை தளத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நமல் ராஜபக்சே,  இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மகிந்த ராஜபக்சே விலகமாட்டார். புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மகிந்த ராஜபக்சே முக்கிய … Read more

இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக , மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து நடந்த மோசமான வன்முறையில்,  ராஜபக்சேவின் மூதாதையர் வீடு உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த பல வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.  இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நிலைமை மோசமாகி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டு வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், திங்கள்கிழமை, அம்பாந்தோட்டாவில் உள்ள ராஜபக்சேவின் மூதாதையர் வீடு, 14 முன்னாள் அமைச்சர்கள், 18 எம்.பி.க்கள் மற்றும் ராஜபக்சே குடும்பத்திற்கு விசுவாசமான தலைவர்களின் வீடுகள் … Read more

இலங்கையில் பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும் சுட உத்தரவு

இலங்கையில் பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும் சுட அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு போரட்டக்காரர்கள் தீ வைத்ததுடன், அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தினர். இந்நிலையில், இன்றும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, சக குடிமக்களை தாக்குவோரையும் சுட்டுத்தள்ள முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காலே மாவட்டத்தில் உள்ள ரத்காமாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர். மேலும், நீர்கொழும்புவில் இரு … Read more

இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு 4 இந்தியர்கள் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்; இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு நான்கு இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர். உலக அளவில் இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்காவில் புலிட்சர் எனப்படும் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு நான்கு இந்தியர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் கடந்தாண்டு ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் தலிபான்கள் கொடூர தாக்குதலில் பலியான இந்தியாவைச் சேர்ந்த டேனிஷ் சித்திக், மற்றும் புகைப்பட கலைஞரான அட்னன் அபிதி, … Read more

ஜப்பான்: பள்ளியில் சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள் சிகிச்சைக்கு அனுமதி

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் யமனாஷி மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் மாணவிகள் கலந்து கொள்ளும் 5 ஆயிரம் மீட்டர் நடை பந்தய போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன் 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.  இதனால் பயந்து போன போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி வெளியான செய்தியில், கைகளை கழுவ வைத்திருக்கும் சேனிடைசரை பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதனை … Read more

கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர், ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. பாகிஸ்தானில் பணவீக்கம் இதுவரை இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளது. CPI தரவுகளின்படி, பணவீக்க விகிதம் 13.4% ஐ எட்டியுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமை புதிய அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பாகிஸ்தானில் மாவு, பருப்பு, பழங்கள், காய்கறிகள், பால், முட்டை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென … Read more

இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது முப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த ராணுவம் அனுமதி

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.   ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.  இதையடுத்து மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த … Read more

இலங்கையில் அரசுக்கு எதிராக மெகா போராட்டம்.. ஊரடங்கு நாளை வரை நீட்டிப்பு..!

இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இலங்கை முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கும் இடையே நேற்று கலவரம் மூண்டது. போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு மகிந்தாவின் ஆதரவாளர்கள் தீ வைத்த நிலையில், பொதுமக்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சிறைக் கைதிகளையும் … Read more

இலங்கையில் நீடிக்கும் வன்முறை – ஐநா கடும் கண்டனம்!

இலங்கை வன்முறை சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல், அரிசி, பருப்பு … Read more