பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித்தொடர்பாளர் தகவல்

காபூல்: பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டுக்கு ஆப்​கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்​தன. இதில், ஏராள​மான பாகிஸ்​தான் வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர். பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​கள் மற்​றும் ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. பாகிஸ்​தானின் ராணுவ கட்​டமைப்​பு​களை ஆப்​கன் படைகள் அழித்​து​விட்​டன” என்று தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே … Read more

போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால்… அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குல் நடத்தி 1,200 பேரை கொன்றனர். 200-க்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர். அக்.7-ந் தேதி 2023-ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசா மீது போா் அறிவித்தார். 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் காசாவை சேர்ந்த 67 ஆயிரம் போர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்றதை தொடர்ந்து இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு … Read more

மெக்சிகோவில் புயலுக்கு 1 லட்சம் வீடுகள் பாதிப்பு; 130 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் என 2 புயல்கள் தாக்கின. இதனால், ஹிடால்கோ, புபேல்லா உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இரு புயல்களால், கனமழை, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் மின்கம்பங்கள், மரங்கள் … Read more

ரஷியாவை எச்சரித்த சில மணிநேரத்தில்… அமெரிக்க பாதுகாப்பு மந்திரியின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம்

வாஷிங்டன் டி.சி., பிரஸ்ஸல்ஸ் நாட்டில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட அளவிலான கூட்டம் நடந்தது. இதில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. அமெரிக்கா சார்பில் அதன் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவர் நேட்டோ நட்பு நாடுகளின் மந்திரிகளின் முன்னிலையில் பேசும்போது, உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டார். ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக சேர்ந்து, ரஷியாவுக்கு எதிராக … Read more

மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல், மர்ம காய்ச்சல்; 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணப்பட்ட எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய கொரோனா வகை தொற்று அந்நாட்டில் அதிகளவில் பரவி வருகிறது. இதனால், இன்புளூயன்சா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பலருக்கும் மர்ம காய்ச்சலும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் இந்த மர்ம காய்ச்சல் பரவல் ஒரே வாரத்தில் 14-ல் இருந்து 97 ஆக உயர்ந்து உள்ளது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 6 ஆயிரம் … Read more

20 முறை குத்தி கொல்லப்பட்ட பிரபல மாடல்! கொடூரனாக மாறிய காதலன்..

Italian Model Stabbed To Death : பிரபல மாடல் அழகி ஒருவர், தனது காதலனால் 20 முறை குத்தி கொல்லப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும். ரஷ்யாவை பொருளாதார ரீதியாக … Read more

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். 64 வயதான ஆஷ்லே டெல்​லிஸ். மும்​பை​யில் பிறந்​தவர். இந்​திய வம்​சாவளி​யான அவர் அமெரிக்க ஆய்​வாளர் மற்​றும் வெளி​யுறவுக் கொள்​கை​யின் ஆலோ​சக​ராக உள்​ளார். அமெரிக்​கா​வில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களை வகித்​தவர் ஆஷ்லே டெல்​லிஸ் (64). முன்​னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்​தில் தேசிய பாது​காப்பு கவுன்​சிலில் … Read more

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

டெல் அவிவ்: இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர். இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினருக்​கும் இடையே 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. 13-ம் தேதி எகிப்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி … Read more

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

காபூல்: பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. இதற்கு பதிலடி​யாக ஆப்​கன் படை​யினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்​கள் 58 பேர் இறந்​த​னர். இந்நிலையில், காந்​த​கார் பகு​தி​யில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று காலை தாக்​குதல் நடத்​தி​ய​து. இதில் ஆப்​கன் மக்​கள் 12 பேர் உயி​ரிழந்​த​னர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். ஆப்​கன் படைகள் நடத்​திய பதில் தாக்​குதலில் பாக். வீரர்​கள் பலர் … Read more