ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மோனிகா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேர ஆர்வம் காட்டுவதாகவும் … Read more

இம்ரான் கான் ராஜினாமா செய்வதுதான் அவருக்கு கவுரவம்- எதிர்க்கட்சிகள் கருத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குலாமி இயக்கம்- பாகிஸ்தான் கட்சி வாபஸ் பெற்றது. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்தது.  ஆனால் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நாளை மறுநாள் நம்பிக்கையில்லா … Read more

ரஷ்ய எண்ணெய் கிடங்கை அழித்தது உக்ரைன்: 37 நாட்களில் எல்லை தாண்டி முதல் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி 37 நாட்கள் ஆகும் நிலையில் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் எண்ணெய்க் கிடங்கின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது உக்ரைன் படைகள். ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ளது பெல்கொரோடு நகரம். இந்த நகரத்தில் மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு உள்ளது. இந்நிலையில் இந்த எண்ணெய்க் கிடங்கைக் குறிவைத்து உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுளது. இதில் அந்தக் கிடங்கு கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. பெல்கொரோடு மாகாண … Read more

இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் வெளிநாடுகளுக்கு ரஷ்யா திடீர் நிபந்தனை

ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள் இன்று முதல் டாலர் அல்லது யூரோவில் பணம் செலுத்தாமல், ரஷ்யாவின் ரூபிள் கரன்சியில்தான் தொகையை செலுத்த வேண்டும் என்று அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ரஷ்ய வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் கணக்கு தொடங்கி பணத்தை செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து பெறும் இயற்கை எரிவாயுவை பெரிதும் சார்ந்து உள்ளன. உக்ரைன் போர் காரணமாக சரிவுக்கு … Read more

11 ஆண்டுகள்… தொடரும் யுத்தம்… – சிரியா சந்தித்த பேரிழப்புகள் – ஒரு பார்வை

“என் நாடு என்னைப் போலவே மிகச் சிறியது எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள் பறப்பதில்லை எங்கள் வானம் கனவு கண்டுகொண்டிருக்கிறது, அந்த நாட்களைக் கேட்டு எங்களது குழந்தைப் பருவத்தை திருப்பித் தாருங்கள்” என்ற பாடலை சவுதியின் வாய்ஸ் நிகழ்ச்சியில் பாடிய க்யூனா என்ற சிரிய சிறுமியை சர்வதேச அரசியலைக் கவனிக்கும் யாரும் மறந்திருக்க முடியாது. பானா அல்பெட், அய்லான், ஓம்ரான் இந்தப் பெயர்களும் அப்படித்தான்.இவர்கள் அனைவரும் சிரிய போரின் தாக்கத்தை நம் … Read more

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல்.!

உக்ரைனுக்கு சொந்தமான 2 ராணுவ ஹெலிக்காப்டர்கள் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து தற்போது தான் முதல் முறையாக ரஷ்ய பிராந்தியத்திற்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையை தாண்டி வந்து குறைந்த அளவிலான தூரத்தில் இருந்தபடி உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். இதில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் … Read more

உக்ரைன் தலைநகர் கீவ் புறநகரில் கடும் சண்டை

உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 37-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தியது. கீவ் நகர் மீது ஏவுகனை வீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்ளை நடத்தி கீவ்வின் புறநகர் பகுதிகளை கைப்பற்றிய ரஷிய ராணுவத்தால் நகருக்குள் நுழைய முடியவில்லை. அவர்களை உக்ரைன் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின் வாங்கச் செய்தனர். மேலும் கீவ் புறநகரில் சில பகுதிகளை ரஷிய படையிடம் இருந்து உக்ரைன் மீட்டது. … Read more

'இந்தியா அதை செய்தால் ஓகே தான்!' – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பளீச்!

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்தம் செய்தால் அதை வரவேற்போம் என, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து உள்ளார். கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல், உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், கீவ், கார்கிவ், கெர்சான், மயுரிபோல் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரஷ்யப் படைகள் தாக்குதலுக்கு பயந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் … Read more

அபேசியா என்ற நோய் பாதிப்பால் சினிமாவில் இருந்து விலகிய புரூஸ் வில்லிஸ் – அபேசியா பாதிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிசிற்கு அபேசியா என்ற நோய்பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அவரது குடும்பத்தினர் அறிவித்த நிலையில், அந்த பாதிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். அபேசியா என்பது பிறருடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் குறைபாடு என அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தின் அபேசியா ஆராய்சி மையம் இயக்குநர் சுவாதி கிரண் தெரிவித்துள்ளார். அந்நோய் பாதித்தோருக்கு பேசுவது அல்லது பிறர் பேசுவதை புரிந்து கொள்ளும் திறன் பாதிக்கப்படும் என அவர் கூறினார். இந்நோய், எழுதும் … Read more

2023-ம் ஆண்டு உலகில் மிகப்பெரிய போர் ஏற்படும்- நாஸ்டர்டாம் கணிப்பில் அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். இவர் எதிர்காலத்தில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை பாடல்கள் போல எழுதி வைத்து உள்ளார். சித்தர்கள் பேசும் பரிபாஷை போன்று அந்த பாடல் வரிகள் உள்ளன. அந்த வரிகளில் உள்ள அர்த்தங்கள்படி குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்தது பிறகே தெரிய வந்தது. குறிப்பாக நாஸ்டர்டாம் மறைவுக்கு பிறகுதான் அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கின. 450 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குறிப்புகள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டன. அந்த … Read more