சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது விசாரணை

பீஜிங் : சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சீன போலீசாரால் கைது செய்யப்படுகிற வரையில், அங்கு சீன அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’னில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில் நாட்டின் ரகசியங்களை சட்ட விரோதமாக வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது கைது நடவடிக்கையில், நீதியின் அடிப்படை தர நிலைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் ஏதுமறியாதவர் என … Read more

அமைதி பேச்சுவார்த்தை தொடரும்: ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அறிவிப்பு

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடரும்என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி செய்து வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரங்களில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதன் ஒரு பகுதியாக … Read more

ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. மரியுபோலில் குடியிருப்பு கட்டிடம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் பெரிதும் சேதமாகி உள்ளன. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. அங்கு 210 குழந்தைகள் உள்பட ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பில் இருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர் கூறி இருக்கிறாரே?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பதில் அளிக்கையில், “எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை, ஆலோசனை … Read more

என் பதவியை பறிக்க அமெரிக்கா சதி செய்கிறது: இம்ரான் கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: எனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் சார்பில் கடந்த 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இம்ரான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முத்தாஹிதா குவாமி இயக்கம் வாபஸ் பெற்றது. இதனால் இம்ரான் கான் அரசின் பலம் 164 ஆக … Read more

தினமும் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு அனுப்ப ஜோ பைடன் முடிவு

தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப்புக் கிடங்குகளில் இருந்து சந்தைக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். அடுத்த ஆறுமாத காலத்துக்கு ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் இதுவரை வரலாற்றில் எடுக்கப்படாத முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. Source link

எரிபொருட்கள் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை

வாஷிங்டன் : உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகச்சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இந்த நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், எரிவாயு விலையை குறைக்கின்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார். அந்த நாட்டின் கையிருப்புகளில் இருந்து தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா … Read more

கொரோனா விதிகளைப் பின்பற்றச் சொல்லி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் இயந்திர நாய்

சீனாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திர நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் மீண்டும் தொற்று பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட இயந்திர நாய் வீதிகளில் நடந்து செல்கிறது. தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறிக் கொண்டே அந்த இயந்திர நாய் வலம் வருகிறது. இந்த நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் … Read more

ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து: உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ : உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கூறி உள்ளார். இன்று (ஏப்ரல்-1) முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்காக ரஷிய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி புதின் குறிப்பிடுகையில், “யாரும் எங்களுக்கு இலவசமாக … Read more

கிரீஸ் தலைநகர் ஏதென்சை தாக்கிய தூசு புயல்.. செந்நிறம் போல் நகர் பொழிவிழந்து காட்சி

கிரீஸ் தலைநகர் ஏதென்சில் வீசும் தூசு புயலால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கிரபொலிஸ் பொழிவிழந்து காட்சி அளிக்கிறது. வட ஆப்பிரிகாவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பிய தூசு புயல் மெல்ல பரவி ஐரோப்பிய நாடுகளை பதம் பார்த்து வருகிறது. செந்நிற போர்வை போர்த்தியது போல் நகர் முழுவதும் ஆரஞ்சு வர்ணத்தில் காட்சி அளிக்கிறது. கட்டடங்களில் படியும் தூசுக்களை சுத்தப்படுத்தும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர். தூசு புயலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது.  … Read more