பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் 10 மணி நேரம் மின்வெட்டு

கொழும்பு : அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அன்னியச்செலாவணி கையிருப்பு மோசமானதால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அவை கடும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியா, அந்த நாட்டுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. சமீபத்தில்கூட 1 பில்லியன் டாலர் (சுமார் … Read more

Video: விண்வெளியில் 355 நாட்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!

ரஷ்யா மற்றும் அமெரிக்கா போர் காரணமாக பிளவு பட்டுள்ள போதிலும், ரஷ்யா மற்று அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஒன்றாக பூமிக்கு திரும்பியுள்ள நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம்.  நாசா விண்வெளி வீரர்  மார்க் வந்தே ஹெய் , சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் கழித்த பிறகு புதன்கிழமை பூமிக்குத் திரும்பினார்.  அவரை போலவே கடந்த ஆண்டை விண்வெளியில் கழித்த ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோருடன் மார்க் … Read more

அமைச்சரவையிலிருந்து முக்கிய கூட்டணி கட்சி விலகல்; பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்கிறது: ஏப்ரல் 3-ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் கூட்டணிக் கட்சி, அமைச்சரவையிலிருந்து விலகி உள்ளது. இதனால் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு … Read more

கார்கீவ் புறநகர் பகுதியை மீட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல்.!

கார்கீவ் புறநகரின் முக்கிய சாலையை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 2-வது பெரிய நகரமான கார்கீவின் புறநகரில் Chuguiv என்ற பகுதியை இணைக்கும் முக்கிய சாலையான மாலா ரோகன் கிராமத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருந்ததாகவும், 3 நாட்களாக நடந்த கடும் போருக்கு பின் ரஷ்யப் படைகளை பின்வாங்கச் செய்து அப்பகுதியை கைப்பற்றியதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. போரால் சோர்வடைந்த ரஷ்ய வீரர்கள் 40 பேரை பிடித்துள்ளதாகவும், சில ரஷ்ய வீரர்களின் சடலங்கள் … Read more

அமெரிக்காவில் ஒமைக்ரான் துணை வைரஸ் ஆதிக்கம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது. ஒமைக்ரானை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1 வைரசை விட 30 சதவீதம் அதிகமாக பரவும். கடந்த 26-ந் தேதியுடன் முடிந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்துக்கு … Read more

எரிபொருள், உணவு, மருந்து தட்டுப்பாடு: இலங்கையில் மின்வெட்டு 10 மணி நேரமாக நீட்டிப்பு

கொழும்பு: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், இலங்கை அரசு நாடு முழுவதும் மின் வெட்டு நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளது. இம்மாத தொடக்கம் முதலே இலங்கையில் 7 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருந்தது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை உள்ளது. இதனால், அங்கு எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு … Read more

நியூ கலிடோனியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!

பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா தீவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், நௌமியா தீவில் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், நியூ கலிடோனியாவின் கிழக்கே 407 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நியூ கலிடோனியாவின் டாடினில் ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த … Read more

தென் கொரியாவில் ஒரே நாளில் 4.24 லட்சம் பேருக்கு கொரோனா

சியோல் : ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து காட்டுத்தீயாக பரவி வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 4 லட்சத்து 24 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்து 74 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் அங்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. … Read more

உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் உதவி – அமெரிக்கா அறிவிப்பு

போரில் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உக்ரைன் இராணுவத்திற்கு தேவையான கூடுதல் உதவிகளுடன் முழு ஆதரவை அமெரிக்கா அளிக்கும் என்று அதிபர் பைடன் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜோ பைடன், ரஷ்ய படைகளின் கொடூர தாக்குதலினால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் நிதியுதவியாக வழங்கப்படும் என தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த உரையாடலில் உக்ரைனுக்கான பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் ரஷ்யா மீது தொடரப்படும் பொருளாதாரத் … Read more

பயங்கரவாத தாக்குதல்களில் 11 பேர் பலி – இஸ்ரேல் பிரதமரிடம் இரங்கல் தெரிவித்த அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் மர்ம நபர் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.    இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரபு  பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது என பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்தார். இஸ்ரேலில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 … Read more