7வது குழந்தைக்கு தாயாகும் பிரபல நடிகரின் மனைவி| Dinamalar
லாஸ் ஏஞ்சலஸ்-அமெரிக்க நடிகர் அலெக் பால்ட்வினுக்கு, ஏற்கனவே ஆறு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மனைவி ஹிலாரியா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான அலெக் பால்ட்வின், 63, நடிகை கிம் பசிங்கரை 1993ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, அயர்லேண்ட் எலிசி பால்ட்வின், 26, என்ற ஒரு மகள் உள்ளார். இந்த தம்பதி, 2002ல் விவாகரத்து பெற்றனர்.பின், 2012ல், அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா, 38, என்பவரை திருமணம் செய்தார். … Read more