பிரிட்டன் அரசிக்கு கோவிட் தொற்று| Dinamalar

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 95 வயதாகும் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதியாகி உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. அனைத்து விதிமுறைகளையும் அரசி பின்பற்றுவார். அதேநேரத்தில் தனது கடைமைகளையும் அவர் பின்பற்றுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அரசியின் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் … Read more

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு!

வாஷிங்டன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது. அமெரிக்கா ஒரே நாளில் 41,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும்,  ஒரே நாளில் 715 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை … Read more

உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்; இந்திய குடிமக்கள் தற்காலிமாக வெளிபேற இந்தியா அறிவுறுத்தல்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நிலவுவதால், கியேவில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லாத இந்திய குடிமக்களும், இந்திய மாணவர்களும், உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக … Read more

‘‘உக்ரைனை  விட்டு வெளியேறுங்கள்’’- இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைனில் வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அத்தியாவசியமான தேவையில்லாத சூழலில் தாயகம் திரும்புமாறு மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று … Read more

'உக்ரைனில் இருந்து வெளியேறுங்க!' – இந்தியர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. … Read more

உக்ரைனில் பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய பீரங்கி தாக்குதல் ; பதுங்கி ஓடும் ராணுவத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் <!– உக்ரைனில் பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய பீரங்கி தாக்குதல… –>

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் இருந்து ராணுவத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பதுங்கி ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில் தொழிற்சாலைகள் நிறைந்த டொனட்ஸ்க் நகரில் பல ஆண்டுகளாக ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத இயக்கங்களுக்கும், உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அங்குள்ள கண்காணிப்பு நிலையத்துக்கு சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மீது பிரிவினைவாத அமைப்பினர் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நிகழ்த்தினர். அவர்கள் பதுங்கியபடியே … Read more

மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்தியா- சீனா உறவு: மத்திய அமைச்சர்| Dinamalar

முனிச்: சீனாவுடனான, நமது உறவு இப்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: சீனாவுடன் இந்தியாவிற்கு பிரச்னை உள்ளது. 45 ஆண்டுகளாக அமைதி நிலவியது. நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் இல்லை. ராணுவ படைகளை கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அது மாறியது. நாங்கள் அதை எல்லைக்கோடு … Read more

இன்றுடன் நிறைவடைகிறது குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர்: 35 பதக்கங்களுடன் முதலிடத்தில் நார்வே…!

பிஜீங், ஒலிம்பிக் போட்டி போல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உறைபனியில் நடத்தக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இதில் இடம் பெறும். இதன்படி 24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுடன் 24-ந் தேதி நிறைவடைகிறது. சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், நார்வே 15 … Read more

லண்டன் வீட்டை விஜய் மல்லையா காலி செய்ய வேண்டும்: யுபிஎஸ் வங்கிக் கடன் பாக்கி விவகாரத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: யுபிஎஸ் வங்கியில் பெற்ற கடன்தொகையை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் லண்டனில் உள்ள வீட்டை காலி செய்யுமாறு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள ரீஜன்ட்பூங்காவுக்கு எதிரில் அமைந்துள்ளது 18/19 என்ற எண்ணில் உள்ள கார்ன்வால் டெரஸ் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு. இதில் விஜய் மல்லையாவின் 95 வயதான தாய் லலிதா வசித்து வருகிறார். விஜய் மல்லையாவின் ரோஸ் கேபிடல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கியில் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை … Read more

இந்திய -சீன உறவு: அமைச்சரின் கருத்தால் சர்வதேச அரங்கில் பரபரப்பு!

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அதன் பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 1975 முதல் இந்திய -சீன எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை. 45 ஆண்டுகளாக நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. ராணுவப் படைகளை எல்லைக்கு கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை சீனா அண்மை காலமாக மீறி … Read more