'உடனே வெளியேறுங்க!' – இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. … Read more

உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு <!– உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்ட… –>

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக, இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு உக்ரைன் தலைநகர் கிவ்-ல் உள்ள இந்திய தூதரகம் இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள் உக்ரைனில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுவதால், இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேறுமாறு உத்தரவு ரஷ்யா நாளை தாக்குதல் நடத்த தொடங்கும் – உக்ரைன் அதிபர் முகநூல் பதிவில் தகவல் உக்ரைன் அதிபரின் முகநூல் பதிவால் … Read more

உக்ரைன் மீது போர் தொடுக்க தயார் நிலையில் ரஷ்யா – வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்

மாஸ்கோ: முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனாலும், ரஷ்யா எந்நேரத்திலும் … Read more

கனடாவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனம்| Dinamalar

ஒட்டாவா: கனடாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி கட்டாயம் என்ற விதிமுறைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடா வரலாற்றில், அவசர நிலை பிறப்பிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்னர் 1980ல் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் பரவலை … Read more

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

ஒமைக்ரான் வகை கொரோனாவால் அங்கு புதிதாக அந்த நோய் பாதிப்பு ஏற்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மட்டும் 1,347 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க மருத்துவமனைகள் திணறுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு; ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை சீனா ஆதரிப்பதை ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் தலைவர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வரும் … Read more

தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.! <!– தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவி… –>

தெற்கு பொலிவியா Chuquisaca மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர். Chuquisaca மாகாணத்தில் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தில் சரிந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா

லண்டன் : இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கொரோனா தொற்றிய நிலையில், தற்போது 2-வது முறையாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் சார்லசின் மனைவியும், இளவரசியுமான கமிலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று … Read more

48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவுக்கு, உக்ரைன் `கெடு'

1 லட்சம் படை வீரர்கள் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த … Read more

தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ; போராட்டத்தை ஒடுக்க அவசர நிலை அதிகாரம் அமல்!

கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், தீவிரமடையும்  டிரக்கர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசரகால அதிகாரங்களை ஜஸ்டின் ட்ரூடோ கோருகிறார். தேசிய நெருக்கடியாக மாறியுள்ள டிரக்கர்கள் தலைமையிலான போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர,  தனது தந்தையும் முன்னாள் பிரதமரும் ஆன பியர் ட்ரூடோ  வழியை பின்பற்றி, கூடுதல் அதிகாரங்களை வழங்க, அவசரகாலச் சட்டத்தை ட்ரூடோ செயல்படுத்துகிறார். அவசர அதிகாரத்தை அமல்படுத்துகையில், இராணுவம் நிறுத்தப்படாது என்றாலும் முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்களை அகற்றும் பொருட்டு எதிர்ப்பாளர்களை கைது செய்வதற்கும் அவர்களின் டிரக்குகளை கைப்பற்றுவதற்கும், அத்துடன் … Read more