சீனாவில் பெருகும் கொரோனா பரவலால் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக் குறி?

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் பயின்று வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது. சீனாவில் தற்போது மேலும் கொரோனா அலை கோரமாக வீசத் தொடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகள் மாபெரும் பூட்டுதலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மாணவர்கள் நேரடி கல்விக்காக சீனா செல்ல முடியாத நிலை உள்ளது. மாணவர்களின் தேவைக்கேற்ப நாட்டிற்குள் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை … Read more

இலங்கை பெட்ரோல் நிலையங்களில் ராணுவம் நிறுத்தப்பட்டது

கொழும்பு : அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. குறிப்பாக அன்னியச்செலாவணி பற்றாக்குறையால் அங்கு இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை, விஷம் போல ஏறி உள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே, கொளுத்தும் வெயிலிலும் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பல மணி நேரம் மின்வெட்டையும் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்து … Read more

சீனாவில் 132 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்… யாராவது உயிர் பிழைத்துள்ளார்களா? 2,000 மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல்

சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் இரவு பகலாக தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இவ்விபத்தில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், விபத்தில் யாராவது உயிர் பிழைத்துள்ளார்களா எனத் தேடும் பணியில் 2ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் சிலரின் உடமைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 6 லட்சத்து … Read more

உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஆதரவு

பெல்மோபன் : இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கதே ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர். அங்கு தலைநகர் பெல்மோபனில் உள்ள இங்கிலாந்து ராணுவ பயிற்சி மையத்துக்கு இளவரசர் வில்லியம் நேரில் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ரஷியாவின் உக்கிரமான போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மரியாதை செலுத்தினார். அங்கு பேசிய அவர், உக்ரைனை பாதுகாக்க போராடி வரும் ராணுவ … Read more

ராணுவக் கண்காணிப்பில் பெட்ரோல் டீசல் விற்பனை ! மோசமாகும் பொருளாதாரம்! தள்ளாடும் நாடு…

இலங்கையில், எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் இங்கு ஒவ்வொரு நாளும் சாதனை உச்சத்தை எட்டுகிறது. இதற்கு அரசின் தவறான முடிவுகள் உட்பட பல காரணங்கள் உள்ளன. எரிபொருள் விற்பனையின்போது கும்பல் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் விதமாக, இந்த நாட்டின் அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், ராணுவத்தின் கண்காணிப்பில் பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.  … Read more

பாகிஸ்தானில் விமானப்படையின் பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்து… 2 விமானிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் விமானப் படையின் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவர் உயிரிழந்தனர். விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட நிலையில், எதிர்பாராதவிதமாக வடமேற்கு நகரமான Peshawar பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த விமானிகள் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link

உக்ரைன்: ஹிட்லரிடம் உயிர் தப்பியவர் புதினிடம் பலி

கீவ் : உக்ரைனைச் சேர்ந்தவர், போரிஸ் ரோமன்சென்கோ (வயது 96). இவர் இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து உயிர் தப்பியவர் ஆவார். ஆனால், கடந்த 18-ந் தேதியன்று ரஷிய அதிபர் புதினின் படைகள் கார்கிவ் நகரில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அமெரிக்காவில் உள்ள அவரது பேத்தி யூலியா கூறும்போது, ‘கடந்த 18-ந் தேதியன்று, கார்கிவ் நகரில் சால்டிவ்கா குடியிருப்பு … Read more

ரஷ்யாவை கண்டிப்பதில் இந்தியாவுக்கு நடுக்கம்| Dinamalar

வாஷிங்டன்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டிக்க, இந்தியா நடுங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ‘ அமெரிக்க வெள்ளை மாளிகையில், ஜோ பைடன் தலைமையில், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. ரஷ்யா மீதான பொருளாதார தடையின் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்ட இக்கூட்டத்தில், ஜோ பைடன் பேசியதாவது:\ உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை, அமெரிக்காவின் பெரும்பாலான நட்பு நாடுகள் ஓரணி யில் நின்று கண்டித்துள்ளன. ஆனால், இந்தியாவுக்கு ரஷ்யாவுக்கு … Read more

உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல இந்திய விமானிகளைப் பயன்படுத்த வேண்டும்… அதிபர் ஜோ பைடனுக்கு எம்.பிக்கள் வலியுறுத்தல்

உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்குவதற்காக இந்தியாவின் விமானிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து 20 எம்பிக்கள் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா, பிரேசில், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளைத் தொடர்பு கொண்டு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு விமானிகளை அழைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் உக்ரைனின் தலைநகரம் உள்பட பல இடங்களில் உணவுக்கும் குடிநீருக்கும் கடும் பஞ்சம் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ரஷ்யா … Read more

சீன விமான விபத்து ப்ரெஷ் செய்தி| Dinamalar

பீஜிங்:சீனாவில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என, சீன அரசு தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் குன்மிங் நகரில் இருந்து, 123 பயணிய ருடன், ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமானம் ஒன்று, குவாங்ஸோ நகருக்கு புறப்பட்டது.இது, குவாங்ஸி மாகாணத்தில் உள்ள டெங்ஸியான் மலைப்பகுதியில் பறந்த போது, மலையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் காட்டுப் பகுதியில் விழுந்து, வெடித்து சிதறியதை அடுத்து, அங்கிருந்த மரங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த … Read more