400 பேர் தங்கியிருந்த பள்ளி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்| Dinamalar
லீவ்,-உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற போராடி வரும் ரஷ்ய ராணுவம், அங்குள்ள பள்ளி கட்டடத்தை ஏவுகணை வீசி தாக்கியது. இந்தக் கட்டடத்தில், 400 பேர், பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பர் எனக் கூறப்படுகிறது. உக்ரைனில் இருந்து, 34 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வார … Read more