பேரழிவை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி ஆயுதங்களை தடை செய்ய வேண்டும்.. ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்.!

பேரழிவை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் யுத்தத்தில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் சூழல் குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் இசுமி நகாமிட்சு கூறிய கருத்துகளை ஒட்டி பேசிய இந்தியாவின் நிரந்தர துணைப் பிரதிநிதி ரவீந்திரன், பேரழிவை ஏற்படுத்தும் அனைத்து வகை ஆயுதங்களையும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யா உக்ரைன் இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையை வரவேற்பதாகக் கூறியுள்ள இந்தியப் பிரதிநிதி பேச்சுவார்த்தை மூலமே … Read more

உக்ரைனில் ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்- 40 பேர் பலி

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகரை 3 முனைகளிலும் சுற்றி வளைத்துள்ள ரஷிய ராணுவம் புறநகர் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கீவ் நகருக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். மேலும் கீவ்வில் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஆனால் ரஷிய படைகளை முன்னேறவிடாமல் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதலை நடத்தி வருகிது. இதனால் … Read more

பிரேசிலில் காரில் கேஸ் நிரப்பும் போது வெடித்துச் சிதறி பெரும் விபத்து.!

பிரேசிலில் காரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கேஸ் டேங்க் வெடித்துச் சிதறியது. சியாரா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் கேஸ் நிரப்பும் இடத்திற்கு போக்ஸ்வேகன் கார் வந்திருந்தது. இதனைக் கண்ட ஊழியர் காருக்கு கேஸ் நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கேஸ் டேங்க் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரும், காரின் ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் கார் முற்றிலும் சிதைந்து சின்னாபின்னமானது. இதுகுறித்த விசாரணையில், அந்தக் காரில் சட்டவிரோதமாக கேஸ் … Read more

இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஜப்பான் திட்டம்

டெல்லியில் இன்று 14-வது இந்தியா ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனால், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று இந்தியா வருகிறார். இந்த மாநாட்டில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். இந்த பயணத்திற்கு முன்பாக … Read more

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு ஆபத்து?- 24 ஆளும் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச … Read more

பிரேசிலில் டெலிகிராமை நாடு முழுவதும் தற்காலிகமாக ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பிரேசில் நாட்டில் சமூக வலைதளமான டெலிகிராமை நாடு முழுவதும் தற்காலிகமாக ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிர வலதுசாரி ஆதரவாளரான பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும், அவரது ஆதரவாளர்களும் டெலிகிராமை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தச் செயலியில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக போல்சனாரோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணையை மேற்கொள்ளும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், நீதித்துறை உத்தரவுகளை பலமுறை பின்பற்ற … Read more

ரஷியாவுக்கு உதவி செய்யக்கூடாது- சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். அப்போது இருவரும் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்தனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பில் சீனா, ரஷியாவுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்யக்கூடாது. ரஷியாவுக்கு சீனா உதவி செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்தார். சீன அதிபர் ஜின்பிங் கூறும்போது, … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்.. முதல் எட்டு இடங்களில் ஐரோப்பிய நாடுகளே உள்ளன..

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் எட்டு இடங்களில் ஐரோப்பிய நாடுகளே உள்ளன. உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு வலையமைப்பு ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளது. இந்த ஆண்டில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மொத்தம் 146 நாடுகள் இடம்பெற்றுள்ளன. பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் இரண்டாமிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகியன முறையே மூன்றாம், … Read more

28ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்- பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. இம்ரான்கான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 100 பேர் கடந்த 8-ந்தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்தனர். இம்ரான்கானின் தவறான கொள்ளைகளால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து எதிர்க்கட்சிகள், “ஒன்றிணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்” என்ற பெயரில் … Read more

Price of War: தொட்டில்களில் எதிரொலிக்கும் ரஷ்ய படையெடுப்பின் தாக்கங்கள்

Russia – Ukraine War: ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் வெள்ளியன்று எல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஏராளமான காலியான ஸ்ட்ரோலர்கள் (குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படும் தள்ளுவண்டி) அணிவகுத்து நின்றன. ரஷ்யா-உக்ரைன் மோதல் பெரியவர்கள் போரை அறிவிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள்தான் போராடி இறக்க வேண்டும். போருக்குப் பின் வரும் இன்னல்கள், துக்கம் மற்றும் வெற்றிகளை இளைஞர்கள்தான் பெற வேண்டும்.  இந்த வார்த்தைகள், தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா … Read more