உலக செய்திகள்
உக்ரைன் – ரஷ்யா போரினால் 4 கோடி மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் – உலகளாவிய மேம்பாட்டு மையம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உணவு மற்றும் எரிசக்திக்கான விலை உயர்வு மூலம் 4 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று உலகளாவிய மேம்பாட்டு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில்,கடந்த 2007 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி உலக கோதுமை ஏற்றுமதியில் கால் பங்கிற்கும் அதிகம் என்றும், இதனை இறக்குமதி செய்யும் நாடுகள் மாற்றுப் பொருட்களுக்கு … Read more
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை: தலிபான்கள் உத்தரவு
காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், தங்களின் முந்தைய ஆட்சியில் இருந்ததைபோல கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம் என்றும், தற்போதைய அரசு அனைவருக்குமான நவீன அரசாக இருக்கும் எனவும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர் மாறாக அவர்கள் நாட்டில் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து தலிபான்கள் அரசின் மூத்த அதிகாரி … Read more
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்துக்கு முதலிடம்| Dinamalar
ஹெல்சின்கி:உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா., ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ரஷ்ய – உக்ரைன் போருக்கு முன்னதாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. … Read more
குண்டு மழை பொழிந்து வருவதால் கீவ் நகரின் மெட்ரோ சுரங்கங்களில் குழந்தைகள், பெண்கள் தஞ்சம்.!
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் போர் விமானங்கள் வட்டமிட்டு குண்டு மழை பொழிந்து வருவதால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் சுரங்கங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். போர் 24 வது நாளை எட்டிய நிலையில் இரவு நேரங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தால் சுரங்கங்களின் உள்ளே வாழும் மக்களின் வாழ்க்கை பரிதாபகரமாக மாறி வருகிறது. பொழுதுபோக வழியில்லாமலும் உணவு குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாமலும் சுகாதார குறைபாடுகளும் இங்குள்ள மக்களை வருத்தி வாட்டுகின்றன. குளிப்பதற்கும் … Read more
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை
ஆஸ்லோ : இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும், உலக அமைதிக்கும் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 3 முதல் 10-ந் தேதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் கமிட்டிக்கு பல இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். … Read more
ஐ.நா.,வில் இந்தியா கவலை| Dinamalar
நியூயார்க்:’உக்ரைன் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, மனிதாபிமான நிலை மோசமடைந்து வருவது கவலை அளிக்கிறது’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால், உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான சூழல் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், ஐ.நா.,விற்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:’உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்தி, பேச்சு வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என, ரஷ்ய அதிபர் புடினிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் மோசம் … Read more
உக்ரைன் விமானப்படைத் தளம் மீது தாக்குதல்
கீவ்: உக்ரைனின் லிவிவ் நகரில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மீது ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மேற்குப் பகுதி பாதுகாப்பானவை என்று கருதப்பட்டது. தற்போது மேற்கு பகுதிகளை குறிவைத்தும் ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்திவருகிறது. உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள லிவிவ் நகரில்விமானப் படைத் தளம் அமைந்துள்ளது. அங்கு போர் விமானங்கள் பழுது பார்க்கப்படுகின்றன. அந்த தளத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் … Read more
ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் வகையில் துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு.!
ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் வகையில் துருக்கியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறக்கப்பட்டது. 1915 சனாக்கலேல தொங்கு பாலத்தை அதிபர் தாயிப் எர்டோகன் திறந்து வைத்தார். இந்திய மதிப்பில் ஏறத்தாழ 21 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பில் துருக்கி மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் இணைந்து பாலத்தை அமைத்துள்ளன. டார்டனெல்ஸ் ஜலசந்தியின் குறுக்கே ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட பாலத்தால் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையிலான பயண தூரம் … Read more
டீச்சரை கத்தியால் 101 முறை குத்திய முன்னாள் மாணவன்
ப்ரசெல்ஸ்: வகுப்பறையில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை 30 ஆண்டுகளுக்குப் பின் கத்தியால் 101 முறை குத்தி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் மாகாணத்தை சேர்ந்தவர் மரியா வெர்லிண்டன் 59. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான இவர் 2020ம் ஆண்டு நவ.20ல் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த பணம் நகை எதுவும் திருடு போகவில்லை. போலீசார் பல கோணங்களில் விசாரித்தும் குற்றவாளி பற்றிய துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் … Read more