காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: காசாவில் திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவர். இதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்குள்ள நஸர் மருத்துவமனையில் இன்று (ஆக.25) மட்டும் இரண்டு முறை தாக்குதல் நடந்துள்ளதாக காசாவில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. முதலில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை கொண்டு ட்ரோன் தாக்குதலும், பின்னர் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டதாக தகவல். “முதலில் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் … Read more

கணவன் மீது விழுந்த 100 கிலோ எடை கொண்ட மனைவி.. உயிரே போச்சு!

100 கிலோ எடை கொண்ட பெண் ஒருவர் நிலைதடுமாறி அவரது கணவர் மீது விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.26 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of … Read more

நடந்தால் போதும்… மின்சாரம் உற்பத்தியாகும்! எப்படி தெரியுமா?

Your Walk Will Turns Into Electricity: முன்னர் சாதாரணமான செயலாக இருந்த நடைகள், இன்று ஜப்பானில் மின்சாரத்தின் புதிய வழியாக மாறியுள்ளன.

காசா போர் நிறுத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தி மெலனியா டிரம்புக்கு துருக்கி அதிபரின் மனைவி கடிதம்

அங்காரா, அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்தநிலையில் துருக்கி அதிபர் தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு … Read more

ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்த டாக்டர்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே அரசு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பெண் டாக்டர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (வயது 28) என்ற டாக்டர் இரவு நேரத்தில் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். … Read more

இங்கிலாந்து ராணியின் மனம் கவர்ந்த ‘கோர்கி’ நாய்களை கொண்டாடும் விழா – லிதுவேனியாவில் கோலாகலம்

வில்னியஸ், மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தனது சிறுவயது முதலே ‘கோர்கி’ இனத்தை சேர்ந்த நாய்களை விரும்பி வளர்த்து வந்தார். சிறிய கால்களுடன் குள்ளமாக காட்சியளிக்கும் இந்த நாய் காண்போரை எளிதில் கவரக்கூடியது. ராணி எலிசபெத் சுமார் 30 ‘கோர்கி’ நாய்களை வளர்த்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் ‘கோர்கி’ நாய்களை கொண்டாடும் விதமாக நாய்களுக்கான பிரத்யேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் பேஷன் … Read more

''புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளேன்'' – மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் பகிர்வு

வாஷிங்டன்: விரைவில் தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை தனது மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக் கூறியுள்ளார். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், நியூராலிங்க் சிப் உதவியுடன் தனது அன்றாட வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். உடல் அசைவில்லாமல் தன்னால் கணினி, ஏர் பியூரிபையர், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் உள்ள சமுதாய கல்லூரியில் தற்போது … Read more

சீனாவை மிரட்டும் ‘கஜிகி’ புயல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பீஜிங், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சான்யா நகரின் தென்கிழக்கே சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவில் ஒரு வெப்பமண்டல புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜிகி’ என பெயரிடப்பட்டுள்ளது. கஜிகி புயல் வடமேற்கு நோக்கி மணிக்கு சுமார் 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அந்த புயல் மேலும் தீவிரமடைந்து காற்றின் வேகம் மணிக்கு 48 கி.மீ. ஆக அதிகரிக்கக் கூடும் என்றும் சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், … Read more

நைஜீரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலால், 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்நிலையில், நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக … Read more