ஈரான் மீது தாக்குதல்.. உள்ளே வரும் ரஷ்யா! டிரம்ப் சொன்னது.. இஸ்ரேல் மருத்துவமனை மீது தாக்குதல்

Ali Khamenei vs Donald Trump: டிரம்பிற்கும் அலி காமெனிக்கும் இடையிலான சமூக ஊடகப் போர் நடந்து வருகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். மீறி எங்களை தாக்கினால் விளைவுகள் பெரிதாக இருக்கும்.. அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர் எச்சரிக்கை.

‘ஈரான் – இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்…’ – அமெரிக்க தூதர் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இணைந்தால் ‘முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 7-வது நாளாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துருக்கிக்கான தூதராகவும் பணியாற்றும் சிரியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் தாமஸ் பராக், பெய்ரூட்டில் லெபனான் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது ஹிஸ்புல்லாவின் நெருங்கிய கூட்டாளியான லெபனானின் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம் ஈரான் – … Read more

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரில் சர்வதேச அணுசக்தி முகமையும் கூட்டாளி: ஈரான் குற்றச்சாட்டு

தெஹ்ரான்: இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரில் ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமையும் ஒரு கூட்டாளியாக செயல்படுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலுக்கு ‘சாக்குப் போக்கு’ உருவாக்கியதற்காக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA – International Atomic Energy Agency) மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசியை டேக் செய்த எக்ஸ் பதிவில், ‘ஈரான் அணு ஆயுதங்களை தீவிரமாக உருவாக்கி வருவதற்கான … Read more

‘ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்…’ – ஈராக் மதகுரு எச்சரிக்கை

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு அயதுல்லா அலி சிஸ்தானி எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஈரான் – இஸ்ரேல் போர் முழு பிராந்தியத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் அவர் கூறினார். இது குறித்து அயதுல்லா அலி சிஸ்தானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானின் உச்ச மதத் தலைவரையும், அரசியல் தலைவரையும் குறிவைப்பது பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது பரவலான குழப்பத்தையும் தூண்டக்கூடும். இது பிராந்திய மக்களின் துன்பத்தை … Read more

“இந்தியா – பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம்” – ட்ரம்ப் ‘புதிய’ தகவல்

வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள்தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகக் கூறி இருக்கிறார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் 4 நாட்கள் வரை நீடித்த நிலையில், பாகிஸ்தானின் … Read more

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறியது – நடந்தது என்ன?

டெக்சாஸ்: டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழ்ந்தது. இந்த விபத்தானது ஸ்டார்ஷிப் திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது … Read more

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன..?

வாஷிங்டன், டிசி பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகையில், “நான் அவரை இங்கு அழைத்ததற்கு காரணம், போரில் ஈடுபடாமல் அதை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினேன்… பிரதமர் மோடி சற்று முன்புதான் வெளியேறினார், நாங்கள் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளோம்… நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் புத்திசாலிகள் இருவரும் போரைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்கள் இரண்டு … Read more

போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

சாக்ரெப், பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் … Read more

இஸ்ரேல் போரில் ‘நண்பன்’ ஈரான் சார்ந்து ரஷ்யா ‘நிதான அரசியல்’ பின்பற்றுவது ஏன்?

போர் என்பதே அரசியல் என்றால், அதை தூண்டிவிடுவதும், போருக்கு ஆதரவாக அணிகள் சேர்வதும், மறைமுகமாக ஆதரிப்பதும், ஆயுதம் வழங்குவதும், கருத்து மட்டுமே சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்பதும், மத்தியஸ்தம் செய்வதும் நுண்ணரசியல் வகையறா எனலாம். எந்த இரு நாடுகள் மோதிக் கொண்டாலும் கோதாவுக்கு வெளியே நிற்கும் மற்ற நாடுகள் மேலே பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு வகையறாவைச் சேர்ந்ததாகவே இருக்க முடிகிறது. நவீன புவி அரசியலில் மாறிவரும் பொருளாதார சார்புகள் அப்படியான நிலைப்பாட்டினை எடுக்கும் நிர்பந்தத்துக்கு உலக நாடுகளைத் … Read more

"ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.." – டொனால்டு டிரம்ப்

டெஹ்ரான், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஈரான் தினந்தோறும் அறிவிப்பது இல்லை. கடைசியாக, கடந்த 16-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், 224 பேர் பலியானதாகவும், 1,277 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. ஆனால், வாஷிங்டனில் உள்ள ஈரானிய மனித உரிமைக்குழு, … Read more