ஆபாச படம் பார்த்த கணவன்.. பழிவாங்கிய மனைவி.. இதை யாருமே எதிர்பார்க்கல!
Husband Wife Bizarre News:: அமெரிக்காவில் கணவன் ஆபாச படங்களை தொடர்ந்து பார்த்து வந்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் மனைவி செய்த காரியம் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Husband Wife Bizarre News:: அமெரிக்காவில் கணவன் ஆபாச படங்களை தொடர்ந்து பார்த்து வந்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் மனைவி செய்த காரியம் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
வாஷிங்டன்: எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன்பின் எச்1பி விசாதாரர்கள் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு அண்மையில் உயர்த்தியது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு நிபுணர்கள் பணியில் சேருவதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. … Read more
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்கு திரவுபதி முர்மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்றனர். தேசியப் பூங்கா பகுதியில் இருவரும், பாதுகாப்பு வாகனத்தில் வலம் வந்தனர். அப்போது … Read more
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ட்ரோன் தயாரிப்புக்காக பல்வேறு நாடுகளில் இருந்து ரசாயனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. இதைத் தடுக்க ஈரானுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் 32 நிறுவனங்கள், தனிநபர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வழியாக ஈரானுக்கு சோடியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட், செபாசிக் ஆசிட் ஆகிய ரசாயனங்கள் சரக்கு கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவின் … Read more
நியூயார்க், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷரா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 80 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு செல்லும் முதல் சிரிய அதிபர் அல்-ஷரா ஆவார். அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, நகைச்சுவையான சில விசயங்கள் நடந்தன. டிரம்ப், வாசனை திரவியம் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்றை ஷராவிடம் கொடுத்து விட்டு, இது ஆண்களுக்கான நறுமண திரவியம் என்றார். இதனை கேட்டு ஷரா … Read more
பெலெம், ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச் காலநிலை ஆபத்து குறியீட்டை வெளியிட்டது. இதில் உலகளவில், 1995-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 9,700 க்கும் மேற்பட்ட தீவிர இயற்கை பேரழிவுகளால் 8.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடர்களுடன் வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளன. என்று தெரிவிக்க … Read more
வாஷிங்டன் அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அளும்கட்சி அந்த ஆண்டுகான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் கான்டிராக்ட்-க்கான நிதி ஒதுக்கீடு, அரசு சேவைகள் வரையில் அனைத்தும் பாதிக்கும். இப்படி இந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, டிரம்ப் அரசு சுதாகார திட்டத்திற்கான மானியத்தை தொடர முடியாது என அறிவித்த காரணத்தால் … Read more
வாஷிங்டன், டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். … Read more
இஸ்லாமாபாத், பாகிஸ்தானுக்கும், ராணுவ புரட்சிக்கும் எப்போதும் தொடர்பு உண்டு. அயூப்கான் முதல் முஷரப் வரை, பாகிஸ்தான் உருவானது முதல் இன்று வரை பல ராணுவ சர்வாதிகாரிகளை அந்த நாடு பார்த்து இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது இரவோடு இரவாக அரசை கவிழ்த்து ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாட்டை கொண்டு வந்து விடுவர். ஆனால் முதல் முறையாக ஆயுதம் இன்றியே, ஏன்..? ராணுவத்தை கூட பயன்படுத்தாமலே, நாட்டின் அனைத்து துறையின் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் … Read more
வாஷிங்டன்: அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவுக்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more