ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? – பாகிஸ்தானிடம் கேட்க அமெரிக்கா பதில்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் … Read more

பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்: இந்தியாவுடனான நட்புறவில் மாற்றம் இல்லை – அமெரிக்கா

வாஷிங்டன், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூசிடம், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் மற்றும் இந்தியாவுக்கு அவர் விடுத்த மிரட்டல் ஆகியவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டாமி புரூஸ். இந்தியா-பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது. … Read more

டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுக்கு விட்டு தரமாட்டேன் – உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

கீவ், ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷிய அதிபர் புதினுடன் வருகிற 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமைதி ஒப்பந்தத்தின்படி சில நிலங்களை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டியதிருக்கும். இரு நாடுகளும் நில பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில், … Read more

'ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது' – காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு

பாரிஸ்: காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், … Read more

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா – பாகிஸ்தான் இணைந்து தீவிரமாக செயல்பட முடிவு

இஸ்லாமாபாத்: முக்கிய பயங்கரவாத குழுக்களை எதிர்கொள்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளில் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே நேற்று (ஆக.12) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் பங்கேற்ற குழுவுக்கு அதன் வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்புக்கான செயல் ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோஜெர்ஃபோ தலைமை தாங்கினார். பாகிஸ்தான் குழுவுக்கு, அந்நாட்டின் ஐநா சிறப்பு செயலாளர் … Read more

அமெரிக்கா சீனாவுக்கு நட்பு… இந்தியாவுக்கு மட்டும் எதிரியா? என்ன நடக்கிறது?

US Favors China, Targets India? சீனா மலிவான ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் ஆர்வம் காட்ட, சவுதி எண்ணெய் வாங்குதல் குறைந்துள்ளது. இதே நேரத்தில், அமெரிக்கா இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்து சர்ச்சை கிளப்பியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும். இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். … Read more

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாக்கிய சிங்கம்

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மாலிபு நகரில் 11 வயது சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த மலைச்சிங்கம் சிறுமியை தாக்கியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்தாள். இதனை தடுக்க முயன்றபோது சிறுமியின் தாயையும் அந்த சிங்கம் துரத்தியது. பின்னர் வீட்டுக்குள் இருந்து வந்த உறவினர் துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதனால் அந்த சிங்கம் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் அந்த … Read more

ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம்

உலகமெங்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பெரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக், கூகுளின் ஜெமினி ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது அப்டேட்களை ஏஐயில் வெளியிட்டு வருகின்றன. சந்தையில் முதலிடத்தை பிடிக்க ஒருபக்கம் போட்டி நடக்கும் நிலையில், இதற்காக தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் டெக் ஊழியர்களை தங்கள் நிறுவனங்களுக்கு இழுக்க முன்னணி நிறுவனங்கள் … Read more

சீனப் பொருட்கள் மீதான 145% வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீதம் வரி விதித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் வரியை உயர்த்தியது. இதையடுத்து சீனாவுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இரு நாடுகள் … Read more