‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாம்; ஆனால் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது’ – ஜெலன்ஸ்கி
நியூயார்க்: இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே அமெரிக்காவின் ஃபாக்ஸ் டிவிக்கு பேட்டி அளித்த ஜெலன்ஸ்கி, “இந்தியா பெரும்பாலும் எங்களுடன் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விகள் இருக்கின்றன. ஆனால், அதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பார்த்துக் கொள்வார் என நினைக்கிறேன். … Read more