“வங்கதேசம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால்…” – முகமது யூனுஸ்

லண்டன்: “வங்கதேச இடைக்கால அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால் எப்போதும் ஏதோ தவறாகிவிடுகிறது” என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் குழுவின் இயக்குநர் பிரான்வென் மேடோக்ஸ் உடன், முகமது யூனுஸ் உரையாடினார். அப்போது, “பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு அனுப்பிய ராஜதந்திர குறிப்பை மீண்டும் நினைவூட்டுவீர்களா?” என பிரான்வென் மேடோக்ஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முகமது … Read more

“குறை சொல்லப் போவதில்லை; ஆனால்…” – மஸ்க் வருத்தம் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் கருத்து!

வாஷிங்டன்: “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரியாக ஒருவார காலத்துக்கு முன் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட ட்ரம்ப் – மஸ்க் தற்போது ஆவேசம் தனிந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கெனவே ட்ரம்ப் – மஸ்க் மோதலில் வார்த்தைகள் தடித்தபோது, பள்ளிக் குழந்தைகள் மோதலைப் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், … Read more

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

பாரீஸ், பிரான்சில் வருகிற ஒரு சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும் சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும்நிலையில் சமூக … Read more

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவும் முகமது யூனுஸ்: வங்கதேச மாணவர்கள் லீக் தலைவர் கடும் குற்றச்சாட்டு

டாக்கா: “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளிக்கிறார்” என்று வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, நாட்டின் இடைக்கால அரசுக்கு ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவாமி லீக் கட்சியின் வங்கதேச மாணவர் லீக் தலைவர் சதாம் உசேன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரை முகமது … Read more

அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்சி அறிமுகம்

வாஷிங்டன், உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா எலான் நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. மேலும் டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ரோபோ டாக்சி கார்களை உருவாக்கி வருகிறது.இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி பொது மக்கள் பயன்படுத்த ரோபோ டாக்சி அறிமுகப்படுத்தபடும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- டெஸ்லா நிறுவனத்தின் சுய- ஓட்டுநர் ரோபோ ரோபோ டாக்சியில் பொதுமக்களுக்கு சவாரிகளை 22-ந்தேதி முதல் தற்காலிகமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ரோபோ டாக்சி அறிமுகம் … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நட வடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது.போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்குதீ வைக்கப்பட்டன. வணிக வளாகங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.கலவரத்தை ஒடுக்க தேசிய காவல் படையினர் மற்றும் கடற்படை வீரர்களை ஜனாதிபதி டிரம்ப் களமிறக்கி உள்ளார். இருந்த போதிலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் தேசிய படையினர்-போராட்டக்காரர்கள் இடையே … Read more

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைபே, தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 30.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தைவானில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 1 More update தினத்தந்தி Related … Read more

பாதுகாப்புக்கான பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் 270 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த செலவினம் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் கூறுகையில், “ கடந்த 2023-ம் ஆண்டிலேயே கடனை திருப்பிச் செலுத்த … Read more

அமெரிக்கா – சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். இதன்படி சீனா மீது 34 சதவிகித வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளாவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இறுதியாக, இரு நாடுகளும் 90 நாட்களுக்கு … Read more

கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி

பெய்ஜிங்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது. இந்தக் கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு – கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. இது … Read more