அமெரிக்கா – சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். இதன்படி சீனா மீது 34 சதவிகித வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளாவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இறுதியாக, இரு நாடுகளும் 90 நாட்களுக்கு … Read more

கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி

பெய்ஜிங்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது. இந்தக் கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு – கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. இது … Read more

நிருபர் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்! – ட்ரம்ப் ஆட்சியில் மோசமாகும் ஊடக சுதந்திரம்?

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர் புல்லட் தான் என்றாலும் கூட செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அநீதி, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும் மோசமாகி உள்ளதை உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடந்தது என்ன? – லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக் களத்தில் ஆஸ்திரேலியாவின் சேனல் 9-ன் பெண் செய்தியாளர் லாரன் தாமஸ், … Read more

‘எங்களுக்கு அரிய தனிமங்கள், அவர்களுக்கு மாணவர் விசா’ – சீனா உடனான ட்ரம்ப் டீல்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு காந்தம் மற்றும் அரிய பூமித் தனிமங்களை சீனா வழங்கும் என்றும், அதற்கு பதிலாக அந்நாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில்வதற்கான விசா வழங்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக ரீதியான உறவு தொடர்பாக லண்டனில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக … Read more

ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா – சீனா இடையே உடன்பாடு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு … Read more

லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு அமல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல பகுதிகளில் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அந்நகரத்தின் மேயர் கரென் பாஸ் அறிவித்துள்ளார். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும், இன்னும் பல நாட்கள் இந்த உத்தரவு அமலில் … Read more

பெண்கள் இறுக்கமான ஆடை அணிய சிரியாவில் கட்டுப்பாடு

டமாஸ்கஸ்: பொது இடங்களில் பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களுக்குச் செல்லும்போது புர்கா அல்லது முழு உடலையும் மறைக்கும் நீச்சலுடைகளை அணிய வேண்டும் என்று சிரியாவின் புதிய இஸ்லாமிய அரசு உத்தரவிட்டுள்ளது. சிரியாவில் ஆட்சியில் இருந்த பஷார் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதை அடுத்து அஹமது அல் ஷரா தலைமையிலான இடைக்கால இஸ்லாமிய அரசு கடந்த டிசம்பரில் ஆட்சிப் பொறுப்பேற்றது. இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்து … Read more

ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் பில்லியனர் எலான் மஸ்க், “ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன், அவை மிகைப்படுத்தப்பட்டன.” என்று தெரிவித்திருக்கிறார். பில்லியனர் எலான் மஸ்க், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-க்கு எதிராக வெளியிட்ட தனது சில பதிவுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த வாரம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் … Read more

கத்தாரில் இருந்து கென்யாவுக்கு சுற்றுலா சென்ற 5 பேர் விபத்தில் பலி

தோஹா, கத்தாரில் வசித்து வந்த 28 இந்தியர்கள், விடுமுறையை கழிப்பதற்காக கென்யாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு பஸ்சில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நியான்டருவா மாவட்டத்தில் ஓல் ஜோரோராக்-நகுரு சாலையில் சென்றபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகவலை கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. கென்யா தலைநகர் … Read more

காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – 25 பேர் உயிரிழப்பு

காசா முனை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more