“காசா பிரச்சினைக்கு மோடிதான் காரணம் என்பது கீழ்த்தரமான அரசியல்” – தமிழிசை சாடல்

சென்னை: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பேசுபவர்களெல்லாம், பிரதமர் மோடியின் அருகில் கூட வர முடியாது. அவர்களது பேச்சு மிகவும் … Read more

காசாவில் தீவிரமடையும் போர்; இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை வழங்க டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல்

வாஷிங்டன் டி.சி., இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. 21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், காசா பகுதியில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி … Read more

டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரம் சந்திப்பேன்: ஜெலன்ஸ்கி தகவல்

கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று ஒரே இரவில் உக்ரைன் மீது 40 ஏவுகணைகள் மற்றும் 580 ட்ரோன்களை … Read more

ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க டிரம்ப் திட்டம்

வாஷிங்டன், கடந்த 2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் உள்ளிட்ட கட்டிடங்களை அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தால் மோதி தகர்த்தனர். அதற்கு பதிலடியாக அல்கொய்தாவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு பதவியேற்றது. அங்கேயே அமெரிக்க படைகள் முகாமிட்டன. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முதல்முறையாக ஜனாதிபதியாக இருந்தபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2021-ம் … Read more

‘மரணத்தை விட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை!’ – காசாவில் இருந்து ஒரு வேதனைக் குரல்

காசா: ”இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. – இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள். இன்றைய நிலவரப்படி காசாவில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்தான் அங்கிருந்து இப்படியொரு வேதனைக் குரல் ஒலித்துள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் … Read more

சவுதி உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷவுகத் அலி, நேற்று (செப். 19) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ரியாத் நகரில் கடந்த 17-ம் தேதி பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில், பாகிஸ்தான் சார்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சவூதி அரேபியா சார்பில் அதன் பட்டத்து … Read more

இந்தியர்களுக்கு பேரிடி: எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் உத்தரவாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய … Read more

அமெரிக்காவில் இந்திய இளைஞர் கொலை

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் சாண்டா கிளாரா பகு​தி​யில் இந்​திய இளைஞரை போலீ​ஸார் சுட்​டுக் கொன்​றனர். தெலங்​கானா மாநிலத்​தின் மஹபூப்​நகரை சேர்ந்​தவர் முகமது நிசா​முதீன் (32). கடந்த 2016-ம் ஆண்​டில் அவர் அமெரிக்கா​வுக்கு சென்​றார். அங்கு புளோரி​டா​வில் உயர் கல்வி பயின்​றார். பின்​னர் கலி​போர்​னியா மாகாணம், சாண்டா கிளாரா பகு​தி​யில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக அவர் பணி​யாற்றி வந்​தார். அங்​குள்ள வாடகை வீட்​டில் முகமது நிசா​முதீனும் மற்​றொரு நபரும் தங்​கி​யிருந்​தனர். கடந்த 3-ம் தேதி இரு​வருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. அ்ப​போது … Read more

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை; இங்கிலாந்து உளவுத்துறை தலைவர்

இஸ்தான்புல், இங்கிலாந்து உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி . இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதின் விரும்பவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு புதின் முன்வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. புதின் நம்மை அவருடன் இணைத்துக்கொண்டிருக்கிறார். புதின் தனது ஏகாதிபத்திய … Read more

இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்.. அதிர்ச்சி! நடந்தது என்ன?

அமெரிக்காவில் இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.