வரலாறு காணாத மழை! 90பேரை காவு வாங்கிய வெள்ளம்..கதறும் மக்கள்!

Latest News Brazil Floods : பிரேசில் நாட்டில், வரலாறு காணாத மழை அடித்துள்ளது. இதில், சுமார் 90 பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

இஸ்ரேல்; போதை பொருள் கடத்தல் தலைவர்கள் 26 பேர் கைது

டெல் அவிவ், இஸ்ரேல் நாட்டின் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த நகரம் இலாத். இந்த நகரில் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து நடந்த அதிரடி நடவடிக்கையின் தொடர்ச்சியாக, போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் போலீசார் கூறும்போது, 10 மாதங்களாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன்படி, ஆபத்துக்குரிய போதை பொருட்களை கடத்தி, வினியோகம் செய்பவர்கள் … Read more

ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்; உக்ரைன் உயரதிகாரிகள் கைது

கீவ், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு முன் ரஷியா படையெடுத்தது. உக்ரைனின் கீவ், கார்கிவ், ஒடிசா, மரியுபோல் மற்றும் டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை போர் தொடக்கத்தில் ரஷியா கைப்பற்றியது. ஆனால் அந்நகரங்களை உக்ரைன் மீண்டும் தன்வசப்படுத்தி கொண்டது. இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விசயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என … Read more

கோவிட்-19 தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!

கொரோனா தொற்று பரவலின் போது, அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது. 

ஏப்ரல் 2024 உலகின் அதிக வெப்பமான மாதம்: ஐரோப்பிய ஒன்றிய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாரிஸ்: சர்வதேச கடல் மற்றும் புவி மேற்பரப்பு வெப்ப சராசரி ஏப்ரல் 2024-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஏப்ரல் மாதமாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்நினோ தாக்கம் படிப்படையாக வலுவிழந்து வரும் சூழலில் அதன் … Read more

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

பீஜிங்: சீனாவின் யுனான் மாகாணம், ஜாவோடாங் நகரில் உள்ள ஜென்ஜியாங் கவுண்டி மக்கள் மருத்துவமனையில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் நுழைந்த ஒரு மர்ம நபர், கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளான். இதனால் பார்வையாளர்கள், நோயாளிகள் என தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் … Read more

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?

ரபா: இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பான எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. கடைசியாக கெய்ரோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்துள்ள இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, … Read more

நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் கடந்த சில தினங்களாக உட்கட்சி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. கட்சி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம் முற்றிய நிலையில், கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அசோக் ராய் தலைமையிலான … Read more

மாலத்தீவுக்கு சுற்றுலா வாங்க… இந்தியர்களிடம் கெஞ்சும் மாலத்தீவு அமைச்சர்!

Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவின் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு

வாஷிங்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார். இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். … Read more