மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின்போது நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஏப்.23) நடந்தது. அப்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் வரை உயிரிழந்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்று மற்றொரு ஹெலிகாப்டரின் காற்றாடி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில், ஏழு பேரை ஏற்றிச் சென்ற HOM M503-3 ரக ஹெலிகாப்டர் … Read more

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-வது இடம்

புதுடெல்லி: அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி 65,960 இந்தியர்கள் முறையான அனுமதி பெற்று அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். அதன்படி மெச்சிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர். இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-ம்ஆண்டு நிலவரப்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 4.6 கோடி பேர்அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 33.33 கோடியில் 14 சதவீதம் ஆகும்.மொத்த வெளிநாட்டவர்களில் 53 சதவீதம் அதாவது 2.45 கோடி பேருக்கு அமெரிக்காவில் குடியுரிமை கிடைத்துள்ளது. அமெரிக்க … Read more

குவைத்தில் முதல்முறையாக இந்தி மொழி வானொலி சேவை

புதுடெல்லி: குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது. குவைத்தில் முதல்முறையாக இந்தி வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. குவைத் வானொலியில் எஃப்.எம். 93.3 மற்றும் ஏ.எம். 96.3 ஆகிய அலைவரிசைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப குவைத் தகவல் தொடர்பு அமைச்சகம் முன்னெடுத்த நடவடிக்கையை இந்திய தூதரகம் பாராட்டுகிறது. இதன் பொருட்டு முதல் நிகழ்ச்சி கடந்த 21 ஏப்ரல் அன்று இரவு 8:30 முதல் 9 மணி வரை ஒலி பரப்பு … Read more

அமெரிக்கா: கார் விபத்தில் சிக்கி 2 இந்திய மாணவர்கள் பலியான சோகம்

நியூயார்க், இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் முக்கா நிவேஷ் (வயது 19) மற்றும் கவுதம் பார்சி. நிவேஷ், கரீம்நகர் மாவட்டத்தின் ஹுசுராபாத் நகரை சேர்ந்தவர். கவதம், ஜங்காவன் மாவட்டத்தின் ஸ்டேசன் கான்பூர் நகரை சேர்ந்தவர். அவர்கள் இருவரும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவுக்கான பொறியியல் படிப்பை படித்து வந்துள்ளனர். இந்நிலையில், அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த … Read more

சிரியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் வீசி தாக்குதல்

டமாஸ்கஸ், சிரியாவில் உள்ள ராணுவ தளம் மீது ஈராக் 5 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக் பிரதமர் முகமது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த அடுத்த நாள் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈராக்கின் ஜும்மார் நகரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுதானி அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை … Read more

5 நாட்கள் தனிப்பட்ட பயணம்.. இன்று சீனா செல்கிறார் நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் (வயது 74), ஐந்து நாள் பயணமாக இன்று சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தாரும் செல்வதாக ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த பயணம் தனிப்பட்ட பயணம் என்றும், இந்த பயணத்தின்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மாகாணத்தின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கூட்டங்களை நவாஸ் நடத்த உள்ளதாகவும், சீன … Read more

இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா

டெல் அவிவ், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது ஒரே நாளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இதற்கிடையே காசாவை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகுவும் சபதம் விடுத்துள்ளார். அதன்படி இந்த போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி 00.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7.94 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 109.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் , 97.8 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0-magnitude quake hits Java, Indonesia — GFZநிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. … Read more

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி..!!

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  நிலையில், அதிபர் முகமது முய்சுவின் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.

“உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா” – ஆய்வறிக்கை

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது. ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தான் இந்த அதிர்ச்சித் தகவல் இடம்பெற்றுள்ளது. இதனால் ஐரோப்பிய … Read more