ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் ஊக்கத்தொகை-அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற சிறப்புப் பணப் பரிசை அறிவிக்கிறேன். 1776-ம் ஆண்டில் நமது தேசம் நிறுவப்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக இந்த ஈவுத்தொகை வழங்கப்படும். 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தலா 1,776 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும். இது அவர்களின் சேவை மற்றும் தியாகத்திற்கு ஒரு அங்கீகாரமாக இருக்கும். அந்த காசோலைகள் … Read more

இந்தியா-ஓமன் இடையேயான நட்பு புதிய உயரங்களை தொடும்- பிரதமர் மோடி பேச்சு

மஸ்கட், பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான பயணத்தை கடந்த 15-ந்தேதி தொடங்கினார். முதலில் ஜோர்டானுக்கு சென்று இருதரப்பு பேச்சுவார்த்தை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் எத்தியோப்பியாவுக்கு சென்றார். எத்தியோப்பிய பயணத்தை முடித்து, பிரதமர் மோடி இறுதிக்கட்டமாக நேற்று மாலை ஓமனுக்கு சென்றடைந்தார். ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை ஓமனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் … Read more

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக … Read more

87 வயதான பிரபல ஓவியர்… 37 வயது மனைவி பேச்சை கேட்டு செய்த செயல்… பிள்ளைகள் அதிர்ச்சி!

World News: 87 வயதான பிரபல ஓவியருக்கும், அவரது 37 வயதான மனைவிக்கும் மகன் பிறந்ததை தொடர்ந்து, அந்த ஓவியர் தனது முந்தைய பிள்ளைகளுடனான உறவை முற்றிலுமாக துண்டிப்பதாக அறிவித்துள்ளார். 

செல்போனில் மட்டுமில்லை..இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ்.. மெட்டா கொடுத்த அப்டேட்

இன்ஸ்டகிராம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்ஸ்டகிராம் செயலியை சுமார் 48 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டகிராம் செயலியில் துவக்கத்தில் புகைப்படம் மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என்ற நிலை இருந்த நிலையில், குறுகிய வீடியோக்களை அப்லோடு செய்து வசதியும் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இப்போதைய 2 கே கிட்ஸ்கல் குனிந்த தலை … Read more

காங்கோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த எம்-23 பயங்கரவாதிகள்

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கனிம வளங்கள் அதிகம் மிக்க இந்த நாட்டில் அதிக அளவில் சுரங்கங்கள் தோண்டி வைரங்கள், எண்ணெய் வளங்கள் ஆகியவை சர்வதேச நாடுகள் தோண்டி எடுத்து ஏற்றுமதி செய்கிறது. இதற்கான ஒருபகுதி வருவாய் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதனை எதிர்க்கும் வகையில் எம்-23 என்ற புரட்சிப்படையினர் மக்களுக்கு ஆதரவாக களம்இறங்கி போராடி வந்தனர். … Read more

வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

டாக்கா, வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இந்த நிலையில், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக … Read more

எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் – பிரதமர் மோடி

அடிஸ் அபாபா, பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்து சென்றார். எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, “ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் … Read more

எத்தியோப்பியா சுற்றுப்பயணம் நிறைவு: ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

அட்டிஸ் அபாபா, பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா – ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். மேலும் இந்தியா – ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார். இந்த பயணத்தின்போது, இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து எத்தியோபியா பிரதமர் … Read more

பஹ்ரைனில் விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து ரத்த தானம் செய்த த.வெ.க.வினர்

பஹ்ரைன், மேற்கு ஆசிய தீவு நாடான பஹ்ரைனின் 54 -வது தேசிய தினத்தை முன்னிட்டு, அங்குள்ள சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தலைவர் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன், கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பஹ்ரைன் 54 … Read more