இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்: அமெரிக்கா முடிவு

வாஷிங்டன், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. … Read more

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹிஜ்புல்லா போராளிகள் 3 பேர் படுகொலை

டெல் அவிவ், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த தளபதிகள் அந்தஸ்திலான 3 முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் … Read more

ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை… மிதக்கும் துபாய்… தவிக்கும் மக்கள்!

Dubai Rains: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். ஆனால் ஏப்ரல் 16ம் தேதி, அதாவது நேற்று பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

“அவர்கள் நாட்டுக்குள்ளேயே…” – பிரதமர் மோடியின் கருத்தும் அமெரிக்கா எதிர்வினையும்

வாஷிங்டன்: “நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.” என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த கருத்துக்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி, உத்தராகண்ட்டின் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து … Read more

தத்தளிக்கும் துபாய் | ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது

துபாய்: வறண்ட வானிலையே ஐக்கிய அரபு அமீரக நாட்டின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் வெகுவாக தடைபட்டன. துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய … Read more

கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து பயங்கரவாத செயல் – ஆஸ்திரேலியா போலீசார்

சிட்னி, ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் வேக்லே புறநகர் பகுதியில், கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்டு என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இதில், மர்மாரி இம்மானுவேல் என்ற பாதிரியார் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அவரை நோக்கி முன்னேறினார். அவர் திடீரென, கத்தியால் பாதிரியாரின் நெஞ்சில் குத்தினார். இதனை எதிர்பாராத அவர், கீழே சரிந்து விழுந்து விட்டார். இதனை பார்த்து ஆலயத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள், முதியவர்கள் என பலரும் நிறைந்த … Read more

அமெரிக்கா: டீன்ஏஜ் மகளை பல ஆண்டுகளாக மிதித்து, கொடுமை செய்த மேயர்

நியூயார்க், அமெரிக்காவின் அட்லாண்டிக் நகர மேயராக இருப்பவர் மார்ட்டி ஸ்மால். இவருடைய மனைவி லாகுவெட்டா ஸ்மால். அட்லாண்டிக் நகர பள்ளிகளின் சூப்பிரெண்டாக லாகுவெட்டா இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்திற்கு இடையே இந்த தம்பதி தங்களுடைய மகளை, பல்வேறு முறை உடல் மற்றும் உணர்வுரீதியாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில் … Read more

ஓமனில் கனமழை, பெருவெள்ளம்; 17 பேர் பலி

மஸ்கட், ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பொதுமக்கள் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டின் அவசரகால மேலாண்மைக்கான தேசிய கமிட்டி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. … Read more

இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன்… ஈரான் பகிரங்க எச்சரிக்கை

தெஹ்ரான், சிரியாவில் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டானியோ கட்டிரெஸ், இதுபோன்று படைகளை குவிப்பதற்கு எதிராக, சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விட்டுள்ளது. அந்த அளவுக்கு பணமோ, … Read more

ஈரானுக்கு எதிரான பதிலடி தேவையா…? இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கருத்து

டெல் அவிவ், போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த 1-ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது. 2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது … Read more