பயண தடையை நீக்குங்கள்… அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை

வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அங்குள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் அமெரிக்க அரசு, ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர். அங்கு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர். இவர்களில் சிலர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து … Read more

பாகிஸ்தான்: 2025-26 பட்ஜெட்டிற்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்

பாகிஸ்தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில்(NCC), அந்நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான 4.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி இலக்குடன் கூடிய தேசிய வளர்ச்சி பட்ஜெட்டிற்கு, ரூ.4,224 பில்லியன்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.2 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாண முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். … Read more

நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்

டோக்கியோ, இரவு வானத்தை பிரகாசமாக்கும் பூமியின் துணைக் கோளான நிலவு, வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த வானியல் ஆய்வாளர்களால் இடைவிடாது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொலைநோக்கியில் தொடங்கிய இந்த ஆய்வு பயணம், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மனிதர்கள் நேரடியாக நிலவிற்கு சென்று கால் பதிக்கும் அளவிற்கு முன்னேறியது. இருப்பினும் நிலவின் மீதான மனித இனத்தின் பேரார்வம் இன்று வரை தணியவில்லை. நிலவில் கால் பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங், “ஒரு மனிதனுக்கு இது மிகச்சிறிய காலடி, … Read more

தேசிய மேம்பாட்டுக்காக ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்: பாகிஸ்தான் நிதி அமைப்பு ஒப்புதல்

இஸ்லாமாபாத்: தேசிய மேம்பாட்டுக்கான ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் (என்சிசி) ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடையும் வகையில், ரூ.4.24 … Read more

காசா முனையில் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு – இஸ்ரேல் தகவல்

காசா, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ … Read more

12 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை: அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் புதன்கிழமை அதிபர் கையெழுத்திட்டுள்ளார். எந்த நாடுகள்? – 12 நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழு நுழைவுத் தடைகளை எதிர்கொள்கின்றன. அவை: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, … Read more

உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், இதுவரை போரை நிறுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போர் எப்போது முடியும் என்று உலகமே எதிர்பார்த்து உள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான போரில் இதுவரை … Read more

“இந்தியா – பாக். பதற்றத்தைத் தணித்தவர் ட்ரம்ப்” – ஷெபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ புகழாரம்

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணித்ததில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்கு குறிப்பிடத்தக்கது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் உதவ வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், “பஹல்காம் சம்பவம் ஒரு தவறான நடவடிக்கை என்பதை … Read more

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் … Read more

‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

வாஷிங்டன்: பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை … Read more