‘உக்ரைன் உடனான போரை 12 நாளில் நிறுத்தாவிட்டால்…’ – ரஷ்ய அதிபர் புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

லண்டன்: அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான போரை நிறுத்த புதினுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் ட்ரம்ப். தற்போது அதை அவர் குறைத்துள்ளார். ஒரே இரவில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 4+ ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப் படை … Read more

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ‘ரத்து’ – அடுத்து என்ன?

சனா: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்​கர் முஸ்​லி​யார் மத்​தி​யஸ்​தம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வரும் அதிகாரிகள், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை. அபுபக்​கர் முஸ்​லி​யார் கோரிக்கையை … Read more

"உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது" – சார்ஜாவில் பிரபலமாகும் 'மணல் குளியல்'

சார்ஜா, மணல் குளியல் என்பது உடலை மணலில் புதைத்து சிகிச்சை பெறும் ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறையாகும். இது ஆங்கிலத்தில் ‘சேண்ட் பாத்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் உடலை சூடான மணலில் புதைத்து அதன் வெப்பம் மூலம் உடலின் பல்வேறு நோய்களை நிவர்த்தி செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பழங்காலம் முதலே இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா, மொராக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளில் மரபு சிகிச்சையாக பயன்படுத்தப்படும் இந்த மணல் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.7 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.24 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 180 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.47டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.23 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of M: 4.7, … Read more

சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 4 பேர் பலி; 3 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை

பீஜிங், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கின் மியுன் புறநகர் பகுதியில், 4,400-க்கும் மேற்பட்டோர் தொடர் மழை எதிரொலியாக, வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். கார்கள் மற்றும் லாரிகள் வெள்ள நீரில் மிதந்து வந்தன. குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கி விட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழை, நிலச்சரிவால் 4 பேர் உயிரிழந்து … Read more

போர் நிறுத்தத்திற்கு கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் நிபந்தனையின்றி ஒப்புதல்

கோலாலம்பூர், தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு தீவிரமடைந்தது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர். அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டரில் 4 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.19 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update … Read more

‘எனது தலையீடு இல்லையென்றால்…’ – இந்தியா – பாக். போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் ரிப்பீட்டு

லண்டன்: தனது தலையீடு இல்லையென்றால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்ந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். தற்போது பிரிட்டன் சென்றுள்ள டொனல்டு ட்ரம்ப், அந்த நாட்டின் பிரதமர் ஸ்டார்மரை ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரியில் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு முன்னதாக உலக நாடுகளுக்கு இடையிலான போர் குறித்து ட்ரம்ப் பேசினார். “நான் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் ஆறு பிரதான போர் நம்மை சுற்றி தொடர்ந்திருக்கும். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான … Read more

தாய்லாந்து – கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: மலேசிய பிரதமர் தகவல்

கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் இன்று மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்களுடன் இணைந்து பேசிய மலேசிய பிரதமர் அன்வர், “கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மிகவும் நேர்மறையான முன்னேற்றத்தை காணும் வகையில் நல்ல … Read more

கம்போடியா – தாய்லாந்து இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை: மலேசியாவில் இன்று நடக்கிறது

கம்போடியா, தாய்லாந்து இடையிலான போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் சமரசத்தை உருவாக்க தாய்லாந்து மற்றும் கம்போடியத் தலைவர்கள் இன்று மலேசியாவில் சந்திக்கின்றனர். கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோர் இன்று (ஜூலை 28) பிற்பகல் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் தலைவராக மலேசிய பிரதமர் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) … Read more