Pak inside Iran. The airstrike killed nine people, including four children | ஈரானுக்குள் பாக். விமான தாக்குதல் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பதுங்கு இடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து, பாகிஸ்தான் துல்லிய தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இது இந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், மேற்காசிய நாடான ஈரானுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானின் எல்லையான பலுசிஸ்தானில் உள்ள, ஜெய்ஸ் அல் ஆதில் பயங்கரவாத … Read more

Minister of Indian origin resigns in Singapore | சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி விலகல்

சிங்கப்பூர், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன், 61, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ சீயென் லுாங் தலைமையில் மக்கள் செயல்பாட்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு போக்குவரத்து துறை அமைச்சராக, இந்திய வம்சவாளியான ஈஸ்வரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் மீது, அங்கு நடந்த கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம், கால்பந்து போட்டி ஆகியவற்றில் நடந்த முறைகேடு, அரசாங்க பிரதிநிதியாக … Read more

விமானத்தில் வாக்குவாதம்; குடிபோதையில் ஊழியரின் கையை கடித்து வைத்த பயணி

டோக்கியோ, ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நோக்கி, ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 159 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 55 வயது பயணி ஒருவர் திடீரென எழுந்து விமான பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதன்பின்னர் அவரை தாக்கியதுடன், பணியாளரின் கையில் கடித்து விட்டார். இதில், பணியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விமானத்தில் பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை முன்னிட்டு அந்த விமானம், ஜப்பானின் டோக்கியோ … Read more

ஈரான் Vs பாகிஸ்தான்… தலையிட முனையும் சீனா! – நடப்பது என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஈரானில் 9 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியில் ஈரானில் 9 உயிர்கள் பறிபோயுள்ளன. இரு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி தாக்கி வருகின்றனர். இது இன்று முளைத்த புதிய பிரச்சினை இல்லை என்றாலும் ஏவுகணை, ட்ரோன் வீசி தாக்கிக் கொள்வது என்பது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு … Read more

Iran Attacks Targeting Terrorists: Shocked Pakistan Warns | பயங்கரவாதிகளை குறி வைத்து ஈரான் தாக்குதல்: அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாதிகளை குறிவைத்து, அதன் மற்றொரு அண்டை நாடான ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. அனைத்து அண்டை நாடுகளுடனும் மோசமான உறவில் உள்ள பாகிஸ்தானுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை கண்டித்துள்ள பாகிஸ்தான், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் எல்லையை ஒட்டியுள்ள இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் மோதலில் உள்ளது. இந்தியாவை தனக்கு போட்டியாக கருதி, பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தி, பல … Read more

100% மனிதர்களை கொல்ல கூடிய கொடிய வைரசை வைத்து ஆய்வு; சீனாவின் திட்டம் என்ன…?

பீஜிங், கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக நாடுகளை புரட்டி போட்டது. அதன் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். எனினும் பல நாடுகளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. இந்த சூழலில், இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரசின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்களில் பலர் முக கவசங்களை அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் பரவலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் … Read more

India has benefited immensely from PM Modi: Antony Blinken praises | பிரதமர் மோடியால் இந்தியா பெரிய பலன் அடைந்துள்ளது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ” பிரதமர் மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்துள்ளன” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராட்டி உள்ளார். இது குறித்து ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது: இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுகிறது. மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. பல இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையாக தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் … Read more

பதிலுக்கு பதில்; ஈரான் மீது வான்வழி தாக்குதல் தொடுத்த பாகிஸ்தான்

தெஹ்ரான், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பை இலக்காக கொண்டு ஈரான் அரசு, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் பலூசிஸ்தானில் நடந்த இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூழலில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் இன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதன்படி, ஈரானின் சப்பார் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டு … Read more

செங்கடல் வணிகப் பாதைக்கு அச்சுறுத்தல் | ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக பட்டியலிட்டது அமெரிக்கா

வாஷிங்டன்: செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. மேலும் ஹவுதிகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து வருகிறது. ஏமன் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றிய ஹவுதிகள் ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் துறைமுகத்துக்கு செல்லும் அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, செங்கடல் பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. … Read more

Singapores Transport Minister S. Iswaran has resigned after being charged with corruption | ஊழல் புகார்: சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா; சம்பளத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை பிரதமர் லீ அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஜூலை மாதம் இவர் மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரணை துவங்கியது. சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இவர் மீதான லஞ்சப்புகார் எழுந்ததை அடுத்து இவர் பெற்ற சம்பளம் மற்றும் படித்தொகையை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளார். இவரது முடிவை ஏற்று கொள்வதாக பிரதமர் லீ … Read more