உக்ரைனின் ஆபரேஷன் சிலந்தி வலை… கதிகலங்கி போன ரஷ்யா… ஆனால் டிரம்ப் ஷாக் ஆனது ஏன்?

Ukraine Drone Attack: ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலால் அமெரிக்கா ஷாக் ஆகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம். 

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்

நியூயார்க்: காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய … Read more

“நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான … Read more

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் பதற்றம்: மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி

நியூயார்க்: அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் மீது தீயை பற்றவைத்துள்ளார். இதில் ஆறு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து முகமது சப்ரி சோலிமான் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலராடோவின் போல்டரில் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர நடத்தப்பட்ட பேரணியின் போது, ஒரு நபர் மக்கள் மீது திரவத்தை வீசி தீவைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அவர் “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” … Read more

வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்

தாகா: வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. … Read more

ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருக்கு இஸ்ரேல் படைகள் முடிவு கட்டியது எப்படி?

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் மற்றும் முகமது சபோனே ஆகி யோரை கொன்றது தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாது காப்பு படை கூறியுள்ளதாவது: காசாவின் கான் யூனுஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு அடியில் ஒரு பதுங்கு குழி கட்டமைப்பு இருப்பதை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்தது. ஹமாஸ் போர் கட்டுப்பாட்டு மையமாகவும் அது செயல்பட்டு வந்தது. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக சென்று அந்த மையத்தை அடையும் வழியும் … Read more

நைஜீரி​யா​ சாலை விபத்தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழப்பு

அபுஜா: நைஜீரி​யா​வில் நடந்த சாலை விபத்​தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழந்​தனர். நைஜீரிய நாட்​டின் தென்​மேற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஓகுன் மாகாணத்​தில் நடை​பெற்ற விளை​யாட்​டு போட்​டிகளில் பங்​கேற்று விட்டு 35 விளையாட்டு வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு பேருந்​தில் வீடு திரும்பி கொண்​டிருந்​தனர். இந்த பேருந்து சிரோ​மாவா என்ற இடத்​தில் உள்ள மேம்​பாலத்​தில் சென்​ற​போது கட்​டுப்​பாட்டை இழந்து, மேம்​பாலத்​தின் தடுப்​புச்​சுவரை இடித்​துக் கொண்டு தரை​யில் விழுந்​தது. இதில் 22 பேர் உயி​ரிழந்​தனர். காயமடைந்​தவர்​கள் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் … Read more

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

கீவ்: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன. இதுகுறித்து உக்ரைன் … Read more

பெண் ஊழியரை கட்டியணைத்து முத்தமிட்ட மேலாளர் – கோர்ட்டு அளித்த பரபரப்பு தீர்ப்பு

பீஜிங், கிழக்கு சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தின் கிங்டாவோவில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் உற்பத்தி மேற்பார்வையாளராக லின் என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஷி என்ற பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அலுவலகப் படிக்கட்டுகளில் லின், தனது சக ஊழியரான ஷியை கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தன. இருப்பினும் தன் மீதான … Read more

உக்ரைன் முதன்முறையாக தீவிர தாக்குதல்… ரஷியாவின் 40 விமானங்கள் அழிப்பு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் … Read more