மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைமை பொறுப்பேற்கும் IIT சென்னை முன்னாள் மாணவர்!

ஐஐடி மெட்ராஸ் பட்டதாரியான பவன் டவுலூரி, அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்களின் பட்டியலில் இணைகிறார்.

நிதி ஆயோக் முன்னாள் பெண் ஊழியர் குப்பை லாரி மோதி லண்டனில் உயிரிழப்பு

லண்டன்: குருகிராமில் வசித்து வந்தவர் செசிதா கோச்சார். இவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பி. கோச்சார் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். நிதி ஆயோக்கில் கடந்த 2021-23-ம் ஆண்டு வரை ‘நேஷனல் பிகேவியரல் இன்சைட்ஸ் யுனிட் ஆப் இண்டியா’வில் செசிதா ஆலோசகராகப் பணியாற்றினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்றார். அங்குள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்லூரியில், நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து முனைவர் (டாக்டர்) பட்டத்துக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 19-ம் … Read more

மிகப்பெரிய தவறு.. ரபா மீது தாக்குதல் நடத்தவேண்டாம்: இஸ்ரேலுக்கு கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காசா முனையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், காசாவின் வடக்கு பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தெற்கு முனையில் உள்ள ரபா நகரம், இஸ்ரேலின் கடைசி இலக்காக உள்ளது. அங்கிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. வடக்கில் இருந்து புகலிடம் தேடி தெற்கு நோக்கி சென்ற லட்சக்கணக்கான மக்கள் … Read more

லண்டன்; சைக்கிளில் வீடு திரும்பிய இந்திய மாணவி விபத்தில் பலியான சோகம்

லண்டன், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பிஎச்.டி. படிப்பை படித்து வந்தவர் சேஸ்த கோச்சார் (வயது 33). அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவரான கோச்சார், டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து விட்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களிலும் படித்துள்ளார். இதனை தொடர்ந்து, லண்டனில் படித்து வந்த அவர், சைக்கிளில் கடந்த வாரம் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் மீது லாரி ஒன்று மோதியது. … Read more

பிரேசிலில் கனமழை, நிலச்சரிவு; 23 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனீரோ, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தென்கிழக்கே கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளமும் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து, பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியதில் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆறுகளிலும் வெள்ளம் வழிந்தோடுகிறது. இதனால், கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கடந்த … Read more

பிடிவாதம் வேண்டாம்.. இந்தியாவுடன் பேசுங்கள்.. மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் வலியுறுத்தல்

மாலே: சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு, மாலத்தீவின் அதிபராக பதவியேற்றதையடுத்து, இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. அந்நாட்டு மந்திரிகள் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தனர். மாலத்தீவின் விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என அதிபர் முய்சு கெடு விதித்தார். அதன்படி இந்திய ராணுவத்தின் முதல் குழுவினர் நாடு திரும்பினர். எஞ்சியுள்ள வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மேலும் … Read more

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி

கீவ், நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 வருடங்களை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் இன்னும் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. எனினும் போர் நின்றபாடில்லை. மாறாக இரு நாடுகளும் தொடர்ந்து … Read more

லண்டன் | சைக்கிளில் வீடு திரும்பிய இந்திய மாணவி லாரி மோதி பலியான சோகம்

புதுடெல்லி: லண்டனில் சைக்கிள் ஓட்டிச் சென்ற 33 வயதான இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 33 வயதான இந்திய மாணவி செய்ஸ்தா கோச்சார் (Cheista Kochhar) என்பவர் கடந்த வாரம் தனது வீட்டுக்குச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் பலியானார். அவரது கணவரின் கண்முன்னரே இந்த கோர விபத்து நடந்துள்ளது. நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி … Read more

கடனில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவு… பிடிவாதத்தை விட்டு இந்தியாவுடன் பேச அதிபருக்கு அறிவுரை!

கடந்த சில காலமாகவே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு மோசமாவே உள்ளது. மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றது முதலே முகமது முய்ஸு  இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். 

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல்.. 10 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் … Read more