நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு

நைஜீரியாவின் சில பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆயுதக் குழுக்கள் கடத்திச் சென்று மிரட்டும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 7-ம் தேதி கதுனா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. அதன்பின்னர் கடந்த வாரம் ஜுரு கவுன்சில் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த … Read more

அமெரிக்காவில் கார் விபத்து.. இந்திய பெண் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷி (வயது 21) என்ற பெண் உயிரிழந்தார். இத்தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- பென்சில்வேனியாவில் மார்ச் 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஜோஷியின் குடும்பம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் … Read more

இங்கிலாந்து மன்னர் சார்லசை தொடர்ந்து இளவரசிக்கும் புற்றுநோய் பாதிப்பு

லண்டன், இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் (வயது 42). கடந்த 2011-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இளவரசியான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஒரு வீடியோவாக … Read more

பாகிஸ்தான் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்.. இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் தொடங்க பரிசீலனை

இஸ்லாமாபாத்: ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான தூதரக ரீதியிலான உறவுகளை குறைத்தது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான வர்த்தக உறவை நிறுத்தியது. அதன்பின் வர்த்தக உறவை தொடருவதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது இஷாக் … Read more

இந்தியா உடனான வர்த்தகத்தை விரும்பும் பாகிஸ்தான் வர்த்தகர்கள்.. வெளியுறவு அமைச்சர் தகவல்!

India Pakistan Trade Relations: நீண்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுடன் ‘நல்ல உறவை’ பராமரிக்க விரும்புகிறது. 

'மனதில் நினைத்தால் ட்வீட் வந்து விழும்…' மனித வரலாற்றில் இது முதல்முறை – இது எப்படி?

Noland Arbaugh First Tweet Using Neuralink: எலான் மஸ்கின் தொழில்நுட்ப நிறுவனமான நியூராலிங்க் ஒருவர் மூளையில் சிப் பொருத்திய நிலையில், அவர் எண்ணங்கள் வாயிலாக முதன்முதலில் ட்வீட் செய்துள்ளார். 

மாஸ்கோ தாக்குதலில் பலி 115 ஆக அதிகரிப்பு; ஐஎஸ் ‘பொறுப்பேற்பு’ – நடந்தது என்ன?

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தத் தாக்குதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3-வது … Read more

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்: இசை நிகழ்ச்சியில் 143 பேர் சுட்டுக் கொலை

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 143 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 140 பேர் படுகாயம் அடைந்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ‘குரோகஸ் சிட்டி ஹால்’ என்ற அரங்கம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு ‘பிக்னிக்’ என்ற ராக் இசைக் குழுவின் கச்சேரிக்கு ஏற்பாடு ஏற்பட்டிருந்தது. அரங்கத்தின் 7,500 இருக்கைகளும் ரசிகர்களால் நிரம்பி இருந்தன. இரவு 8 மணிக்கு இசைக் … Read more

ரஷியாவில் தாக்குதல்; 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேர் கைது

மாஸ்கோ, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹால் என்ற இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது. தீ வேகமாக பரவியதால் இசை அரங்கத்தின் … Read more

பூட்டானில் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

திம்பு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பூட்டானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார். மேலும், இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி அந்நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி எழுதிய ‘கர்பா’ பாடலுக்கு பாரம்பரிய … Read more