LCC elected as Egypts president for the 3rd term | எகிப்து அதிபராக எல்சிசி 3வது முறையாக தேர்வு

கெய்ரோ, மேற்காசிய நாடான எகிப்தில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 10 — 12ம் தேதி வரை நடந்தது. இதில் தற்போதைய அதிபராக உள்ள அப்தெல் பதா எல்சிசியை எதிர்த்து, குடியரசு கட்சியின் ஹசெம் உமர், எகிப்திய ஜனநாயக கட்சியின் பரித் சஹ்ரான், லிபரல் கட்சியின் அப்தெல் சனத் யமாமா ஆகியோர் போட்டியிட்டனர். நான்கு முனை போட்டி நிலவினாலும், எல்சிசி தான் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, … Read more

3 ஆண்டுகளில் 7 கொலைகள்…!! சீனாவில் பெண் சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பீஜிங், சீனாவை சேர்ந்த பெண் சீரியல் கில்லர் லாவோ ராங்சி (வயது 49). 1996 முதல் 1999 வரையிலான 3 ஆண்டுகளில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் 7 பேர் கொடூர கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக போலீசார் அவரை தேடி வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரில் வாட்ச் விற்பனையில் ஈடுபட்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய … Read more

science science | உலக ஒற்றுமை தினம்

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என ஒற்றுமையின் வலிமையை பாடலால் அறிவுறுத்தியவர் பாரதியார். உலகில் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக 2005 முதல் டிச., 20ல் ஐ.நா., சார்பில் சர்வதேச மனித ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஜாதி, மத மோதல், உள்நாட்டு சண்டை, பயங்கரவாத செயல் குறையவில்லை. போரினால் மக்கள் அகதியாக மாறும் அவலம் உள்ளது. மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத்தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ … Read more

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை – மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்

ரெய்க்ஜேன்ஸ், உலகின் 18வது பெரிய தீவாக, வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்திருக்கிறது ஐஸ்லாந்து நாடு. இந்த நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் … Read more

Train set on fire in Bangladesh: Four dead | வங்க தேசத்தில் ரயிலுக்கு தீ வைப்பு: நான்கு பேர் பலி

டாக்கா நம் அண்டை நாடான வங்க தேசத்தில், பொதுத் தேர்தலுக்கு எதிராக எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தின்போது, பயணியர் ரயில் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது; இதில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகினர். வங்கதேசத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் அவாமி லீக் ஆட்சியில் இருந்தால் தேர்தல் … Read more

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து – 13 பேர் பலி

கொனக்ரி, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா. இந்நாட்டின் தலைநகர் கொனக்ரியில் உள்ள ஹலம் பகுதியில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் வெளிநாட்டினர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 178 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு,மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்கான … Read more

118 people died in successive earthquakes in China; 500 people were injured | சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 118 பேர் பலி ; 500 பேர் படுகாயம்

பீஜிங், சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 118 பேர் பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நம் அண்டை நாடான சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களின் எல்லை பகுதி யில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:59 மணிஅளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீதிகளில் தஞ்சம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கன்சு மாகாணத்தில் உள்ள லிங்சியா செங்குவான்ஜென் பகுதியில் … Read more

அணு உலை குளிர்விக்கும் கோபுரத்தில் குதித்து…!! சாதனை வீடியோவை வெளியிட்ட இளைஞர்

நியூயார்க், இளம் தலைமுறையினர் சாகசங்கள், சாதனைகளை படைப்பதற்கான ஆர்வம், உத்வேகத்துடன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்து என்று தெரிந்தும், ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போன்று என கூறி விட்டு சாகசங்களில் ஈடுபட தயாராகி விடுகின்றனர். இந்த நிலையில், 21 வயது தடகள வீரர் ஒருவர் புதிய சாதனை ஒன்றை படைக்க தயாரானார். இதற்காக அவர் உடலில் பாராசூட்டை கட்டி கொண்டு அந்த பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார். அந்த கோபுரத்தின் மேல்முனை பகுதிக்கு சென்று … Read more

Premier League Mini Auction: Bat Cummins auctioned for Rs 20.5 crore | மிச்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கும், பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கும் ஏலம்

துபாய்: இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ‛மினி’ ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸி., அணியின் மிச்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடி கோல்கட்டா அணியும், ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ்-ஐ ரூ.20.5 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டி-20’ கிரிக்கெட் தொடர், 2008 முதல் நடத்தப்படுகிறது. இதன் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ‘மினி’ ஏலம் … Read more

2nd ODI: Tamil Nadu player hits fifty | 2வது ஒரு நாள் போட்டி: தமிழக வீரர் அரைசதம்

ஜிபெர்ஹா: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று ஜிபெர்ஹாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. கெயிக்வாட் 4, திலக் … Read more