“நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” – இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் குறித்து டிரம்ப்

வாஷிங்டன்: நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான் ஈரானின் தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்படி நடக்க கண்டிப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார். இன்று (ஏப்.14) அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் … Read more

இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை கைப்பற்றியது ஈரான்: கடும் விளைவுகள் ஏற்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கு சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது கடந்த 1-ம்தேதி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில்ஈரான் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு சென்ற எம்எஸ்சி … Read more

இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்: ஏவுகணைகள், டிரோன்கள் ஏவப்பட்டதாக தகவல்

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது … Read more

சிட்னி கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம் – ஷாப்பிங் மாலில் நடந்தது என்ன?

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஷாப்பிங் மாலில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் ஒரு ஷாப்பிங் மால் ஒன்றில் ஆஸ்திரேலிய ரக்பி லீக் ஜெர்சி அணிந்த ஒரு நபர் பெரிய கத்தியுடன் கண்ணில் சிக்குபவர்களை குத்தி தாக்குதல் நடத்தினார். ஒன்பது மாதக் குழந்தை, அவரின் தாய் என பலரை அந்த நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவசர அழைப்பின்படி ஹெலிகாப்டர் … Read more

ஆசியாவிலேயே பாகிஸ்தானில்தான் விலைவாசி அதிகம்: ஆசிய வளர்ச்சி வங்கி தரவுகள் சொல்வது என்ன?

இஸ்லாமாபாத்: 25 சதவீத பணவீக்கத்துடன், ஆசியாவிலேயே அன்றாட வாழ்வுக்கு அதிக பிடிக்கும் நாடாகவும், 1.9 சதவீதத்துடன் பிராந்தியத்தின் நான்காவது குறைவான பொருளாரா வளர்ச்சியுடைய நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக, ‘பாகிஸ்தானில் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 15 சதவீதமாக இருக்கும். பிராந்தியத்தில் உள்ள 46 நாடுகளைக் காட்டிலும் இது மிகவும் அதிகம். நாட்டின் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 2.8 சதவீதமாக இருக்கும். இது 2024-25 நிதியாண்டின் ஐந்தாவது மிகவும் குறைவான விகிதமாகும்’ … Read more

உக்ரைன் போரில் ரஷியாவுடன் கைகோர்த்த சீனா… அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு

நியூயார்க், உக்ரைனுக்கு எதிராக ரஷியா 2 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷியா தன்னுடைய நாட்டில் ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்ய சீனா உதவி செய்து வருகிறது. இதற்காக கூட்டாக இரு நாடுகளும் பணியாற்றி வருகின்றன என அமெரிக்கா கூறியுள்ளது. இதுபற்றி சி.என்.என். வெளியிட்ட செய்தியில், ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் ஒரு விரிவான பாதுகாப்பு தளம் அமைப்பதற்கான நோக்கத்துடன் ரஷியா பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவ உற்பத்தியை விரைவுப்படுத்தும் வகையில், சீனா … Read more

பயங்கரவாதிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இஸ்ரேல்

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. … Read more

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாத தாக்குதல்?

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் ஒரு ஷாப்பிங் சென்டர் ஒன்றில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், “ஷாப்பிங் சென்டரில் பலர் கத்தியால் குத்தப்பட்டதாக அவசர சேவையில் புகார்கள் வந்தன. ஒரு ஒன்பது மாத குழந்தை உட்பட பலர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். … Read more

இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த கூடும்; அமெரிக்கா கணிப்பு

வாஷிங்டன், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது. இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில், நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் … Read more

ஈரானை முன்வைத்த அமெரிக்காவின் ‘எச்சரிக்கை’யை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

டெல் அவிவ்: “சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விரைவில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்” என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து துளைத்தெடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 1500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் வான்வழி, தரைவழி என அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸை அழிக்கும் … Read more