முதல் முறையாக 400 கிலோ போதைப்பொருட்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கனடாவில் கைது
டொரண்டோ: 400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருட்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக அண்மையில் ஒரு லாரி வந்தபோது அதை போலீஸார் மடக்கி சோதனை நடத்தினர். அதில் 406.2 கிலோ எடையுடைய மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய டிரைவர் கோமல்பிரீத் சித்து கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம் கனடாவில் வசித்து வருகிறது. … Read more