ஆப்கானிஸ்தான்: ஓட்டல் குண்டுவெடிப்பில் சீனர் உள்பட 7 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஷார்-இ-நவ் பகுதியில் சீன முஸ்லிம்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கூட்டாக இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சீன முஸ்லிம்களுக்காகவே இந்த ஓட்டல் நடத்தப்பட்டு வந்துள்ளது என கூறப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாண பகுதியை சேர்ந்தவரான அப்துல் மஜீத் என்ற சீன முஸ்லிம், அவருடைய மனைவியுடன் சேர்ந்து இந்த ஓட்டலை நடத்தி வந்துள்ளார். எனினும், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் சாப்பிட கூடிய வகையில் ஓட்டலில் … Read more

அசாம் மாநிலத்திற்கான 1 ரூபாய் வடகிழக்கு முழுவதும் பயன் தரும்: முதல்-மந்திரி பிஸ்வா

டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது. இதன்படி, நேற்று தொடங்கிய இந்த மாநாடு வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்முறையாக அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அவர் பேசும்போது, குறைகடத்தி தொடர்பாக 20-ந்தேதி டாடா நிறுவனத்துடன் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். டாடாவால் அசாமில் சுற்றுச்சூழல் மெல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார். அசாமில் ஓட்டல்கள், தங்கும் … Read more

எட்டு தடவைக்கு மேல் எத்தனை தடவை பேசுவது?

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நட்பு மிளிரும் சரித்திரம் இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதில் இருந்தே இந்த உறவில் சற்று விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்தியாவுக்கு பாதகமாக பல நடவடிக்கைகளை அவர் எடுக்க தொடங்கினார். முதலில் அவர் இந்தியாவுக்கு பரஸ்பர வரி என்ற பெயரில் 25 சதவீத வரி விதித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த நிதி மூலம்தான் ரஷியா உக்ரைனில் ரத்தக் களறியை … Read more

ஆப்கானிஸ்தான்: காபூலில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு

காபூல், காபூலில் நடந்த குண்டு வெடிப்பு, காபூல் நகரின் நான்காவது மாவட்டத்தில் உள்ள குல்பரோஷி தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் அருகே ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், அப்துல் மதீன் குவானி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஆரம்பகட்ட தகவல்படி, பலர் கொல்லப்பட்டு, காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான … Read more

ஸ்பெயின் ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு; 100 பேர் காயம்

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனால், அந்த அதிவிரைவு ரெயில், அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த, அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. … Read more

செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

நோவி சாத், செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில், அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துகளை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர். இதற்காக மாணவர்கள் ஒன்றாக கூடி, தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.27 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய … Read more

ஸ்பெயினில் அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து; 10 பேர் பலி

மாட்ரிட், ஸ்பெயினில் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இது அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசால் நடத்தப்படும் ரெயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள், ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, … Read more

வங்காளதேசத்தில் இந்து வியாபாரி அடித்து கொலை

டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டார். காஜிபூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் ஓட்டல் மற்றும் இனிப்பு கடை நடத்தி வந்தவர் லிட்டன் சந்திர கோஷ் (வயது 55). இவரது கடைக்கு மசூம் மியா என்ற வாலிபர் வந்தார். அப்போது … Read more

அதிவேக ரயில்கள் மோதி விபத்து… 21 பேர் பலி – ஸ்பெயினில் நடந்தது என்ன?

Spain Train Accident: ஸ்பெயில் நாட்டில் அதிவேக ரயில் தடம்புரண்டு, மற்றொரு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.