பாகிஸ்தான்: நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சுமார் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் … Read more

ஜப்பான் அருகே தென் கொரிய சரக்கு கப்பல் மூழ்கியது- 7 பேர் மாயம்

டோக்கியோ: தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியது. கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 4 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். 7 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. கியோயங் சன் என்ற ரசாயனக் கப்பல் சாய்ந்துகொண்டிருப்பதாகவும், ஜப்பானின் முட்சுர் தீவுக்கு அருகில் தஞ்சம் … Read more

மகிழ்ச்சி மிகு நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம், இஸ்ரேஸ் 5-ம் இடம்; இந்தியா 126-ல் நீடிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நார்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நார்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த நார்டிக் பிராந்திய நாடுகள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் 5-வது இடத்தில் இருக்க, இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் ஆதரவோடு ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் இந்த … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் 90 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. … Read more

உடலுறவு… அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் – பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!

World Bizarre News: 16 வயது சிறுமியுடன் பாலியல் உறவில் இருந்த ஆசிரியைக்கு, இனி எங்கும் ஆசிரியராக பணியாற்ற முடியாத அளவில் வாழ்நாள் தடை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு கப்பல், பணியாளர்கள் மீட்பு: பிரதமர் மோடிக்கு பல்கேரியா அதிபர் நன்றி

புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல்மற்றும் அதன் பணியாளர்கள் மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கேரியா அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்துள்ளார். மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி கடத்திச் சென்றனர். கடந்த 3 மாதங்களாக அதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல், கடந்த சனிக்கிழமை ரூயென் சரக்கு கப்பலையும் அதன் 17 … Read more

Sparrow Day | சிட்டுக்குருவி தினம்

* அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம், பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பறவைகளில் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் ‘கீச் கீச்’ எனக் கூக்குரலிடும். இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.* மக்கள் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 20ல் உலக மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. * அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை … Read more

பிரேசில் நாட்டில் சுட்டெரிக்கும் வெப்பம்.. சூட்டை தணிக்க கடற்கரைகளில் தஞ்சம் அடையும் மக்கள்

ரியோ டி ஜெனிரோ, பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் ஆகும். வரும் நாட்களிலும் இதே நிலை காணப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் … Read more

இந்த முறை பொதுமக்கள் 100 பேரை கடத்தினர்… நைஜீரியாவில் ஆயுதக்குழுவினர் அட்டூழியம்

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், கதுனா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்ற நிலையில், கடந்த இரு தினங்களில் பொதுமக்கள் 100 பேரை கடத்தி சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜுரு கவுன்சில் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர், டோகன் நோமா சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 14 பேரை … Read more