Ex Pak PM Imran Khan Gets 10-Year Jail For Exposing Official Secrets | அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு: பாக்., முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமின் … Read more

அமெரிக்க பல்கலை., வளாகத்தில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு: மகனைக் கண்டுபிடிக்க தாய் கோரிய நிலையில் சோகம் 

இண்டியானா: அமெரிக்காவில் பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், பல்கலை. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகனைக் காணவில்லை என அவரது தாயார் தெரிவித்த அடுத்த நாளில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “அலிசன் சாலையில் இறந்த ஒருவரின் உடல் இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்ததில் பர்டூர் பல்கலைக்கழக வளாகத்தில் இறந்து கிடந்தது கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அம்மாணவர், நீல் ஆச்சாரியா … Read more

Missing Indian student found dead on USs Purdue University campus: Official | அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் மர்ம மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் பர்டூ பல்கலையில் படித்து வந்த இந்திய மாணவர் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலையில், இந்தியாவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் படிப்பு படித்து வந்தார். இவரை கடந்த 28 ம் தேதி முதல் காணவில்லை என தாயார் சமூக வலைதளத்தில் புகார் … Read more

மனித மூளையில் ‘சிப்’ – சோதனையைத் தொடங்கியது எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’ – மருத்துவத்தில் ஒரு மைல் கல்

கலிபோர்னியா: நம் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதை சரி செய்ய மூளையில் சிப் பொருத்தினால் என்ன நேரும்?! மருத்துவ உலகில் குறிப்பாக நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய்களுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் இந்தக் கேள்விக்கு செயல் வடிவம் கொடுக்கும் முன் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம். ஆம், நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான … Read more

மாலத்தீவு அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்: எம்.டி.பி., ஜனநாயக கட்சிகள் தீவிரம்

மாலே: கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். இவர் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இந்நிலையில், அதிபர் முய்சு அமைச்சரவையில் 4 பேரை அமைச்சர்களாக நியமிக்கும் பரிந்துரைக்குஒப்புதல் பெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் பரிந்துரைக்கு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி), ஜனநாயகவாதிகள் கட்சியினர் ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். இதனால் ஆளும் கூட்டணியான அதிபர் முய்சின் தேசிய மக்கள் காங்கிரஸ் மற்றும் மாலத்தீவு முற்போக்கு … Read more

4 people linked to Mossad spy agency hanged in Iran | ஈரானில் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு தூக்கு

டெஹ்ரான் : இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து, நாசவேலையில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு ஈரானில் நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. உளவு பார்ப்பதாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடனான போரிலும், இஸ்ரேலுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் தன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரானை கருதுகிறது. அந்நாட்டு … Read more

மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி திட்டம்

மாலி, மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனிடையே, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதிபர் முய்சு தலைமையிலான அரசில் புதிதாக நியமிக்கபட்டுள்ள 4 மந்திரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் … Read more

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை மீட்ட இந்திய போர்க்கப்பல்

புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர் களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை இந்திய போர்க்கப்பல் பத்திரமாக மீட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஏமனை சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சரக்கு கப்பல்கள், போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி தீவிரவாதிகள் … Read more

இலங்கை மீன்பிடி கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் – 6 பேரின் நிலை என்ன?

கொழும்பு, இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இலங்கையில் இருந்து 2 ஆயிரத்து 40 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு சோமாலியா அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை சிறைபிடித்தனர். பின்னர், 6 மீனவர்களுடன் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த இலங்கை கடற்படையினர் மீட்புப்பணிக்கு விரைந்துள்ளனர். அதேவேளை, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களின் நிலை என்ன? எங்கு கடத்தப்பட்டுள்ளனர்? உள்ளிட்ட விவரங்களை அறியவும், கடத்தப்பட்டவர்களை விடுவிக்கவும் இலங்கை அரசு … Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு சரிந்த எலான் மஸ்க்…முதலிடத்தில் யார் தெரியுமா?

வாஷிங்டன், உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தை இழந்தார். எலான் மஸ்க்கை 2-வது இடத்துக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை பிடித்தார். பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை, பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி … Read more