ரஷ்யாவில் தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களுக்கு தடை – நீதிமன்ற நடவடிக்கையின் பின்புலம்

மாஸ்கோ: தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களை தடை செய்து ரஷ்ய நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன்பாலின உறவை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்களும் தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அநாட்டில் தன்பாலின உறவாளர்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்படவும், வழக்குக்கு உள்ளாவாகவுமான நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு தொடர்பாக விமர்சனங்கள் வலுத்து வரும் சூழலில், ரஷ்ய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று … Read more

The position lost by Nithyananda: The trial of the Paraguayan official | நித்தியானந்தாவால் பறிபோன பதவி: பராகுவே நாட்டு அதிகாரிக்கு வந்த சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அசுன்சியன்: சாமியார் நித்தியானந்தாவின் ‘கைலாசா’ என்ற நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சரவையில் பணியாற்றிய அதிகாரி அர்னால்டோ சமோரா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே ஹிந்துக்களுக்கு என தனியாக ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கியதாக கூறிய நித்தியானந்தா, அந்நாட்டிற்கான தனி கொடி, பார்போர்ட், நாணயம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் ஐ.நா சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் … Read more

முடிவுக்கு வந்த ஒரு வார கால போர் நிறுத்தம் – இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 14 பேர் உயிரிழப்பு

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான ஒரு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த சிறிது நேரத்திலேயே போர் தொடங்கிய நிலையில், காசாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். … Read more

Vladimir Putin Urges Russian Women To Have 8 Or More Children | 8 பிள்ளைகளை பெத்துக்கோங்க: ரஷ்ய அதிபர் புடின் கெஞ்சல்

மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவை சந்தித்துவரும் சூழலில் ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவும், இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. அங்கு 1990 முதல் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. மேலும், உக்ரைன் … Read more

COP28 | பருவநிலை மாற்றத்துக்கான லட்சியத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

துபாய்: பருவநிலை மாற்றத்துக்கான லட்சியத்துக்கு ஏற்ப அதற்கான நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அலிடிஹாட் செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது: “காலநிலை மீதான உலகின் லட்சியங்கள் அதிகரித்துள்ளன. அதற்கு பொருந்தக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் ஏற்பட … Read more

“2024 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை” – எலான் மஸ்க்

வாஷிங்டன்: வரவிருக்கும் 2024 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருவது வழக்கம். இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு புதன்கிழமை ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அந்த பேட்டியில் எலான் மஸ்க்,” 2024 நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் … Read more

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன் – எலான் மஸ்க்

வாஷிங்டன், 2024 தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று உலக கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் கூறினார். எலான் மஸ்க் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கருத்துகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்தவகையில் `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில் … Read more

COP28 – சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி: முக்கியத்துவம் என்ன?

துபாய் நகரம்: சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (வியாழன்) துபாய் சென்றடைந்தார். அவருக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில் துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், சிந்தனை மையங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், மாணவப் … Read more

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு: துபாய் சென்றடந்தார் பிரதமர் மோடி

துபாய், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை துபாய் புறப்பட்டார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார். மேலும் பிரதமர் மோடி … Read more

நியூயார்க்கில் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் சதி; அமெரிக்காவின் புகார் பற்றி விசாரணை – மத்திய அரசு

வாஷிங்டன்: நியூயார்க்கில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வருகிறார். அமெரிக்காமற்றும் கனடா ஆகிய இரட்டை குடியுரிமையை பெற்றுள்ள பன்னுன் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய சிலர் … Read more