நியூயார்க்கில் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் சதி; அமெரிக்காவின் புகார் பற்றி விசாரணை – மத்திய அரசு

வாஷிங்டன்: நியூயார்க்கில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வருகிறார். அமெரிக்காமற்றும் கனடா ஆகிய இரட்டை குடியுரிமையை பெற்றுள்ள பன்னுன் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய சிலர் … Read more

சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம் – பிரதமர் மோடி

துபாய், உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டை அமீரக மந்திரியும், காப்-28 மாநாட்டின் தலைவருமான டாக்டர் சுல்தான் ஜாபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஐ.நா உச்சி மாநாட்டு வளாகத்தின் நீல மண்டலத்தில் பல்வேறு நாடுகளின் கண்காட்சி அரங்குகள் … Read more

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு

அசுன்சியோன்: நித்தியானந்தாவின் ‘கைலாசா’ கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோராவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு (45) தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கர்நாடகாவின் பிடதியில் 200 ஏக்கர் பரப்பில் அவரது தலைமை பீடம் செயல்படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவருக்கு பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய அவர் கடந்த … Read more

உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' என்ற யானை உயிரிழப்பு

மணிலா, விலங்குகள் நல ஆர்வலர்களால் “உலகின் சோகமான” (World’s ‘saddest’ elephant) யானை என பெயரிடப்பட்ட “மாலி” எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலி பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே கழித்துள்ளதாம். ‘மணிலா’ மிருகக்காட்சிசாலையில் நான்கு தசாப்தங்களாக இருந்து வரும் மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் பேஸ்புக் காணொளியில் … Read more

காதலுக்கு கண் முக்கியமல்ல…காதலனின் கண்ணை பதம் பார்த்த காதலி…!

வாஷிங்டன், காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் காதலர்களுக்கு கண் இருக்கிறது. கண் இருப்பதால்தான் ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினால் மட்டுமே காதல் மலர்கிறது. ஆனால் இங்கு அண்ணல் நோக்கியதோ வேறு பெண்களை. இதனால் வெகுண்ட எழுந்த காதலி காதலனின் கண்ணை பதம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது காதலருடன் கடந்த 8 வருடங்களாக … Read more

Former US Secretary of State Henry Kissinger dies at 100 | அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிசிஞ்சர் 100 வயதில் மரணம்

வாஷிங்டன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவுடனான உறவை இகழ்ந்து பேசிய, அதே நேரத்தில், நரேந்திர மோடி பிரதமரானப் பின், இந்தியாவுடனான நல்லுறவு குறித்து வலியுறுத்திய, ஹென்ரி கிசிஞ்சர், 100, உயிரிழந்தார். குடியுரிமை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்தவர் என்ற பெருமையை பெற்றவர், ஹென்ரி கிசிஞ்சர். கடந்த, 1970களில், இரண்டு அதிபர்கள் கீழ் பணியாற்றிய அவர், சர்வதேச அளவில் பல பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர். இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்ததாக, அவருடைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஆனால், … Read more

world Aids | உலக எய்ட்ஸ் தினம்

உலகில் 2022 கணக்கின்படி, 4 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2022ல் மட்டும் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 6.30 லட்சம் பேர் பலியாகினர். எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. ‘சமூகம் வழிநடத்தட்டும்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு … Read more

Terrorist Hardeep Singh Nijjar murder: India Must Take Canadas Allegations Seriously: Justin Trudeau After US Case | கனடா குற்றச்சாட்டு: இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனட பிரதமர் இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய … Read more

Demolition of UNESCO heritage symbol despite Pakistan being a UNESCO vice-chairman | யுனெஸ்கோ துணை தலைமையில் பாக்., இருந்தும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் இடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: யுனெஸ்கோவின் நிர்வாக குழுவிற்கு துணைத்தலைவராக பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்ட போதிலும், கோயில்களை இடிக்கும் அந்நாட்டின் போக்கு மாறவில்லை. பாகிஸ்தானில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டதற்கு அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஹிந்துக்களின் கோயில்களை சேதப்படுத்துவது, அவமரியாதை செய்வது, ஹிந்து மத … Read more