'பிரிக்ஸ்' அமைப்பு விரைவில் மறைந்து போகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகளை உள்ள–டக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நிலையில் டிரம்ப் கூறியதாவது:- பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது. எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பிற்கு ஒரு கடுமையான பொருளாதார சவாலை எதிர்க்கொள்ளும் ஒற்றுமை இல்லை.பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி … Read more

போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்

உக்ரைனில் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் போர் காரணமாக உள்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மனிதர்களை கடத்துதல், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடுத்த போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றப்பதிவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி, ஆன்லைன் மோசடிகள், ஆயுதக் கடத்தல், … Read more

நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: ஒருவர் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நைஜர் நாட்டின் தலைநகர் நியாமியில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்மேற்கு நகரமான டோசோவில் ஒரு கட்டுமானத் தளத்தில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார். “ஜூலை 15 அன்று நைஜரின் டோசோ பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் … Read more

இந்தியா – பாக். மோதலின்போது 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு விருந்தின்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது, போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4 அல்லது 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. ஆனால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். ஏனெனில், நிலைமை தொடர்ந்து மோசமாகிக் … Read more

இந்தியா-சீனா உறவுகள்: ஒருபக்கம் ஒத்துழைப்பு, மறுபக்கம் போட்டி!

India China relations: இந்தியும் சீனாவும் ஒரே பாதையில் நடக்கின்றன, ஆனால் நோக்கங்கள் வேறுபட்டவை. ஒரு கை கைபிடிக்க விரும்புகிறது, மற்றொரு கை கவசம் எடுத்து நிற்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் தொடர்பு இல்லை: பாக். தகவல்

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ள தகவல் குறித்து பார்ப்போம். ”பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட மற்றும் செயலிழந்த அமைப்பு ஆகும். அந்த … Read more

பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு

வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க … Read more

அகதிகளாக வந்த ஆப்கானியர்களில் 81 பேரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிய ஜெர்மனி

பெர்லின், ஆப்கானிஸ்தானில் 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து பலரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். இவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களில் 81 பேரை ஜெர்மனி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்பு, அகதிகள் விண்ணப்பம் நிராகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 81 பேரும் சொந்த … Read more

பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

பெய்ஜிங்: ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும் ஆர்ஐசி முறையின் செயல்பாடு தடைபட்டது. தற்போது இந்தியா – சீனா இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன பயணம் … Read more

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு நரம்பு நோய் பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு 79 வயதாகிறது. கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை பைனலின் போது, டிரம்ப்பின் வீங்கிய கால்கள் பத்திரிக்கையாளர்களால் போட்டோ எடுக்கப்பட்டது. அதேபோல், வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது, அவரது கையில் காயங்கள் இருப்பது போன்ற போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரது உடல்நலம் குறித்து விவாதம் எழுந்தது இந்த நிலையில், ஜனாதிபதி டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெள்ளை மாளிகை … Read more